Friday, December 31, 2010

புலிகளினால் முதன் முதல் உருவாக்க பட்டு வெள்ளோட்டம் விடப்படும் உலங்குவானூர்தி

Thursday, December 30, 2010

கொழும்பு நகரில் பாதுகாப்பு கமெராக்களின் செயற்பாடுகள் ஆரம்பம் !

 சி.சி.டி.வி கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை பல கோணங்களில் முழுமையாக கண்காணிக்கும் பணிகளை நேற்று(டிச29) பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
சி.சி.ரி.வி கெமராக்களின் கட்டுப்பாட்டு அறை பொலிஸ் நலன்புரி சங்க கட்டிடத் தொகுதியின் ஆறாவது மாடியில் அமைந்துள்ளது.
கொழும்பு நகரில் மொத்தமாக 105 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அதேவேளை அவற்றின் ஊடான கண்காணிப்பு நடவடிக்கைகளை 28 திரைகளின் ஊடாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்வையிட முடியும். மேலும் பல நாட்களுக்கு இதன் காட்சிப் படங்களை சேகரிக்கும் தன்மையையும் இக் கெமராக்கள் கொண்டுள்ளன.
பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் தலைநகரில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இப் பாதுகாப்பு நடவடிக்கை பொது மக்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.மேலும் இத்திட்டம் 227 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், வாகன நெரிசல்களை அவதானித்தல், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளை கைது செய்கின்ற போது குற்றவாளிகளை பின்தொடர்தல், வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை இந்த கெமராக்கள் மூலமாக துல்லியமாக அவதானிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா டெலிகொம், இலங்கை மின்சார சபை, மொரட்டுவைப் பல்கலைகழகம், மெட்ரோபொலிடன் நிறுவனம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவை பொலிஸ் திணைக்களத்திற்கு இத் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு வகையில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

logo design

அரை மணி நேரத்தில் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் உயிரோடு இல்லை என்பதை தெரிந்துகொள்!! - நடேசனின் கடைசி நிமிடங்கள்!

மனித குலத்தையே குலைநடுங்க வைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. இரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித்தனியாகத் தொங்கத் தொங்க, ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க, எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக,வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ்.....

என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள இராணுவம். - இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு! முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில் சுட்டெரிக்க, குழந்தைகள் கதறக் கதற... ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்ற அப்பாவி ஈழ மக்கள் மீது எறிகணைகள், வெடிகணைகள், நச்சுக் குண்டுகளை வீசி சிங்கள இராணுவம் நிகழ்த்திய இனப் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அமைப்புகள்.

இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றி, விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இலங்கையில் இருந்து உயிர் தப்பி வந்த ஏராளமானவர்கள், இந்தக் குழுவுக்கு தங்களின் சாட்சியங்களை அனுப்புகிறார்கள். வாக்குமூலங்களை அனுப்பிவைக்க கடைசித் தேதி கடந்த 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது அந்தக் கெடு, காலவரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சிங்கள அரசின் போர்க் குற்றங்களை நிரூபிப்பது, தமிழீழ மண்ணில் இருக்கும் மக்களுக்கு, புலம்பெயர்ந்தவர்களால் செய்யக்கூடிய ஒரே உதவியாக இருக்கும் எனும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு இதில் தீவிரம் காட்டுகிறது. இதற்கான தனித் துறையை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சாட்சியங்களைப் பெற்று ஐ.நா. பொதுச் செயலாளர் குழுவுக்கு அனுப்புகிறது, அந்த அமைப்பு.

இதன் ஒரு பகுதியாக, சரண் அடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனின் மகன், சிறப்புத் தளபதி ரமேஷின் மனைவி ஆகியோரின் எழுத்து வடிவிலான வாக்குமூலங்கள் ஐ.நா. குழுவிடம் போயிருக்கின்றன.

அந்த வாக்குமூலங்கள் நமக்கும் கிடைத்தன. நடேசனின் மகன் பிரபாத்: நடேசன் என அழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் இறுதிக்கால அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பாலசிங்கம் மகேந்திரனின் மகனான எனது பெயர் பிரபாத் சுரேஷ் மகேந்திரன். வயது 30. இங்கிலாந்தில் வசிக்கிறேன்.

கடைசியாக நான், என் தந்தை மற்றும் குடும்பத்தினருடன், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணி அளவில்... அதாவது, அவர்கள் சரண் அடைவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு பேசினேன். அப்பா என்னிடம் கடைசியாகச் சொன்னது, வெளிநாட்டு இராஜதந்திரிகள் எங்களை சிங்கள இராணுவத்திடம் சரண் அடையச் சொல்கிறார்கள். ஆனால், நானோ என்னுடன் இருப்பவர்களோ, சிங்கள இராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருப்போம் என நம்பவில்லை.
காயம்பட்ட போராளிகள் 1,000 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நான் சரண் அடைந்துதான் தீர வேண்டும். அது குறித்து, மேலதிக அறிவுரைகளைப் பெறுவதற்காக தலைவரைத் ( பிரபாகரனைக் குறிப்பிடுகிறார்!) தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அம்மாவும் புலித்தேவனும் என்னுடன்தான் இருக்கிறார்கள்.

இன்னும் அரை மணி நேரத்தில், நான் உன்னுடன் பேசாவிட்டால், நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்!’ என்றார். அரசியல் பிரிவினரும், பொதுமக்களும் படுகாயம் அடைந்திருக்க, உடனடியாக சிகிச்சைபெற வேண்டிய நிலையில் துன்பகரமான நிலையில் இருந்தார்கள் அவர்கள். கடைசி நாட்களில் சுற்றி இருந்தவர்களின் உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே என் அப்பாவின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஆயுதம் எதுவும் இல்லாத நிராயுதபாணிகளாகவே நின்றனர்.
ஆனாலும், அப்பாவையும் உடன் சென்றவர்களையும் இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது. நேரில் கண்டவர்களும் என்னிடம் அதுபற்றிக் கூறினார்கள். தேவைப்பட்டால், ஐ.நா. குழுவானது அவர்களுக்கு சாட்சியப் பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில், அவர்களின் விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன்...'
' என்று கூறி உள்ள பிரபாத், ''அந்த சாட்சியங்கள் இன்னும் இலங்கை மண்ணில்தான் இருக்கிறார்கள்!' என்பதையும் கூறி இருப்பது அசாதாரணமானது. அவரின் இந்த வார்த்தைகள், அர்த்தம் பொதிந்தவை. ரமேஷின் மனைவி வத்சலாதேவி புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த நேரத்தில், புலிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக நின்றவர் புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஷ்.
நடேசனைப் போலவே, எதிரியிடம் எப்படியும் தன் உயிர் போகும் எனத் தெரிந்தும், படுகாயம் அடைந்த ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் இவர். 'போரில் கொல்லப்பட்டார்’ என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இந்த ரமேஷ்தான், கைகள் கட்டப்பட்டு கேவலமாக நடத்தப்பட்ட காட்சியின் வீடியோ பதிவு அண்மையில் வெளியானது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி தற்போது தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார். அவரது வாக்குமூலமும் ஐ.நா.

குழுவுக்குப் போய் இருக்கிறது. 1964-ம் ஆண்டு பிறந்த என் கணவர் துரைராஜசிங்கம், 84-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 'ரமேஷ்’ என இயக்கப் பெயர் சூட்டப்பட்ட அவருக்கு, இயக்கத்தில் கேணல் எனும் உயர் நிலை வழங்கப்பட்டது. கடைசி ஒரு மாதத்தில் மோதல் மிகவும் மோசமாக இருந்தது. எங்கள் இடங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டதால், அங்கு இருந்து வெளியேறினோம். ஏப்ரல் 28-ம் தேதி, மட்டக்களப்புக்குச் சென்றோம். மேற்கொண்டு அங்கு தங்கி இருக்க முடியாத நிலையில், தென் ஆபிரிக்காவுக்கு வந்தோம். என் கணவர் கடைசியாக மே 15-ம் தேதி என்னிடம் பேசினார்.'எங்களின் கடமையை முடித்துவிட்டு விரைவில் உங்களுடன் சேர்ந்துகொள்வேன்’ என சொன்னார்.
ஆனால், அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. போரில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்கிறது. நான் அங்கு இருந்தபோதே, என் கணவர் கொல்லப்பட்டதாக அறிவித்தார்கள். ஆனால், அவருடைய உடலைக் காட்டவே இல்லை. அதனால், அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை. இப்போது, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் என் கணவர் சரண் அடைவதாகக் காட்டப்படுகிறது. எனவே, அவர் போரின்போது கொல்லப்படவில்லை, உயிருடன்தான் பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன், இருக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்.
என் கணவர் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியும், அவருடைய நிலைமைபற்றி ஒன்றுமே தெரியவில்லை. நானும், என் பிள்ளைகளும் அவருக்கு என்ன ஆனது என்பதைப்பற்றிய கவலையிலேயே இருக்கிறோம். அவரைப்பற்றி பலவிதத் தகவல்கள் வருகின்றன. என் கணவரை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது என்பதை வீடியோ காட்சி நிரூபிக்கிறது.
எனவே, கைது செய்யப்பட்ட போர்க் கைதி ஒருவரின் நிலைமையைப்பற்றி இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஐ.நா. குழுவானது விசாரணை நடத்தி, என் கணவரின் கதி என்ன என எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு ஏதேனும் நேர்ந்திருந்திருந்தால், என் கணவர் உயிருடன் இல்லை என்றால் இலங்கை இராணுவம்தான் அவரைக் கொன்றிருக்க வேண்டும்.
அது இலங்கை இராணுவத்தின் அப்பட்டமான போர்க் குற்றம்!'' என்கிறார். இந்த வாக்குமூலங்களை அடிப்படையாகவைத்து, நாடு கடந்த தமிழீழ அரசு, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை ஐ.நா. குழுவின் முன்பு நிறுத்தி சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது
. பிரபாத், வத்சலாதேவி இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். இருவரின் உயிர்ப் பாதுகாப்பு மட்டும் இன்றி, லட்சம் மக்களின் உயிரைக் குடித்த கொடிய குற்றத்துக்கான வலுவான சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், ஐ.நா. விசாரணைக்கு முன்பு, தங்கள் படமோ பேட்டியோ இடம்பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என நமக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் 'இனப் படுகொலை, போர்க்குற்ற விசாரணை துறை’ அமைச்சர் டிலக்சன் மொரிஸ் நம்மிடம் பேசினார்.
இலங்கைத் தீவில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் அப்பட்டமான இனப் படுகொலை. அவை நிரூபிக்கப்பட்டால், அங்கு இரு தேசங்கள் உருவாக வழிவகுத்துவிடும். இதனால், இதை சில மேலைநாடுகள் போர்க் குற்றம் என்று மட்டும் கூறுகின்றன.
அப்படி சுருக்கிப் பார்ப்பது, மகிந்தா ராஜபக்ஷே அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ரணில் விக்கிரமசிங்கவை அதிபர் ஆக்குவதற்கு மட்டுமே உதவி செய்வதாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில், நடேசனுடைய மகன், தளபதி ரமேஷின் துணைவி ஆகியோரின் வாக்குமூலங்களையும், இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலரின் குழுவுக்கு அனுப்பி உள்ளோம். ஏற்கெனவே, டப்ளினில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் மூலம் இனப் படுகொலை என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்திவிட்டோம்.
அதைப்போலவே, சட்ட ரீதியாகவும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் மூலமும் ஈழ மக்கள் மீதான இனப் படுகொலையை நிரூபிக்காமல் விடமாட்டோம்! என்றார்.
புலம்பெயர்ந்த ஈழ மக்கள் மத்தியில் புல்லுருவிகளை உருவாக்கி, போர்க் குற்றங்களை மறைக்க ராஜபக்‌ஷே முயன்றாலும், இனவெறிப் படுகொலை செய்த குற்றத்துக்காக அவர்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என அழுத்தமாக நம்புகிறார்கள் ஈழத் தமிழர்கள்... கூடவே தமிழக ஈழ உணர்வாளர்களும்!


logo design

Monday, December 27, 2010

வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச்(Assange Julian) ஒப்பந்தம்

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (29). அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ரகசியங்களை வெளியிட்டதால் இவர் தலைமறைவானார். இங்கிலாந்தில் பதுங்கியிருந்த இவர் மீது 2வீடன் பெண்கள் பாலியல் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் லண்டனில் உள்ள தனது நண்பரின் பங்களாவில் தங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளார். இதற்காக அவர் புத்தக நிறுவனங்களிடம் ரூ.7 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தகவலை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவீடனை சேர்ந்த 2 பெண்கள் என் மீது “செக்ஸ்” புகார் கூறியுள்ளனர். அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.14 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். இந்த வழக்கை நடத்த இன்னும் அதிக அளவு பணம் தேவைப்படுகிறது.

அதற்கான பணம் சேர்க்கதான் நான் எனது சுயசரிதையை எழுத இருக்கிறேன். அமெரிக்காவை சேர்ந்த புத்தக பதிப்பாளர் ஆல்பிரிட் ஏ. நாப் என்பவரிடம் ரூ.4 கோடியும், இங்கிலாந்தை சேர்ந்த பதிப்பாளரிடம் ரூ.3 கோடியும் பெற்றுள்ளேன் என்று கூறினார்.

எனது சுயசரிதை புத்தகத்தில் சுவீடன் பெண்கள் என் மீது கூறியுள்ள “செக்ஸ்” புகார் பற்றி எழுத மாட்டேன். மற்றபடி என் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை எழுதுவேன் என்றார். இதன் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
logo design

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடுந்தொனியிலான கடிதம்! -விக்கிலீக்ஸ் வெளியிட்டது

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தினை சிறிலங்காவினது முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிற்குக் காட்டுவதற்கு நோர்வே விரும்பவில்லையாம்.

இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதுபோன்ற அந்தரங்கக் கடிதங்களின் பிரதியினை வழங்குவது வார இதழ்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது என சிறிலங்காவிற்கான முன்னாள் தூதுவர் ஹான்ஸ் பிறஸ்கர் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் துணைத் தூதர் ஜேம்ஸ் என்ட்விசிலிடம் கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் இரகசியத் தகவலின்படி அமெரிக்கத் துணைத் தூதுவர் இந்தத் தகவலை அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஓகஸ்ட் 18 2005 அன்று இந்த இரகசிய தகவல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த இரகசியத் தகவலில் இவ்வாறு என்ட்விசில் கூறியிருக்கிறார்.
ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].

சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேண்டுகைக்கமைய கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினது தூதுவர் விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடுமாறு பிறசல்சுக்குப் பரிந்துரைக்கும்.

ஓகஸ்ட் 16ம் நாளன்று கொழும்பில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளில் தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக எடுத்துக் கூறுவதற்காக ஓகஸ்ட் 18ம் நாளன்று நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் அமெரிக்கத் துணைத் தூதுவரைச் சந்தித்திருக்கிறார்.

லண்டனில் வைத்து விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலசிங்கத்தினைச் சந்தித்து நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கான கடிதத்தினை வழங்கியிருந்ததை இந்தச் சந்திப்பின்போது ஹான்ஸ் பிறட்ஸ்கர் உறுதிப்படுத்தியிருந்தார்.

பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதியினைத் தாம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப் போவதில்லை என்றும் இவ்வாறு வழங்குவது வழமையான நடவடிக்கை இல்லை என்றும் பிறட்ஸ்கர் கூறியிருக்கிறார்.
முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசன், ஹெல்கீசன் ஆகியோர் அதிபர் சந்திரிகாவினைச் சந்தித்துக் கலந்துரையாடிய அந்தரங்க விடயங்கள் கொழும்பு ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டிருந்தது.
ஆதலினால் குறிப்பிட்ட இந்தக் கடிதத்தின் பிரதியினைச் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்குவதானது கொழும்பு ஊடகங்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது எனப் பிறட்ஸ்கர் கூறுகிறார். இந்தத் கடிதத்தினை எவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என பிறஸ்கர் அமெரிக்காவினைக் கோரியிருக்கிறார்.

குறித்த இந்தக் கடிதத்தினை மிகவேகமாக தமிழுக்கு மொழிபெயர்த்து அதனைக் கிளிநொச்சிக்கு அனுப்புவதாக பாலசிங்கம் ஜான் பீற்றசனிடமும் ஹெல்கெசனிடமும் உறுதியளித்ததாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
வடக்குக் கிழக்குப் பகுதியில் அண்மைய நாட்களாக விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் பாலசிங்கம் தனது கரிசனையினை வெளியிட்டிருக்கிறார். ஆனால் கதிர்காமரது படுகொலை தொடர்பில் தெளிவான பதிலெதனையும் வழங்காமல் தவிர்த்திருக்கிறார்.
நோர்வேயினது வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதையிட்டுத் தான் மகிழ்வடைவதாகவும் பிரபாகரனுக்கும் நோர்வேக்குமிடையிலான நேரடிச் சந்திப்புக்கள் விரைவில் இடம்பெறுவதைத் தான் விரும்புவதாக பாலசிங்கம் கூறியிருக்கிறார். [அந்தச் சந்திப்பில் தானும் கலந்துகொள்ளுவதற்கு விரும்புவதாகப் பாலசிங்கம் கூறியிருக்கிறார். பாலசிங்கம் இல்லாத நிலையில் ஒரேயொரு முறை மாத்திரமே நோர்வே கடந்தகாலத்தில் பிரபாகரனைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் பீற்றசனுடனான இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவிற்கான பயணம் தொடர்பாக பாலசிங்கம் எதுவும் குறிப்பிடாத போதும் முன்னதாக தான் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்தபோது ஒக்ரோபரில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யும் எண்ணத்தில் தானிருப்பதாக பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.

நோர்வே பிரபாகரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கான பதில் விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்தபின்னர் தான் மீண்டும் அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்து உரையாடுவதாக பிறட்ஸ்கர் கூறுகிறார். தானறிந்தவரை ஜான் பீற்றசனுக்கும் ரைசுக்கும் இடையிலான சந்திப்பு இந்தவாரம் இடம்பெறும் என பிறஸ்கர் தொடர்ந்தார். செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினை நியூயோர்க்கில் நடாத்தும் எண்ணத்திற்கு தாங்கள் தொடர்ந்தும் விருப்பம் தெரிவிப்பதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.

இது இவ்வாறிருக்க சிறிலங்காவிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளை அழைத்திருந்த சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறது [குறித்ததொரு அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டுமெனில் அதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தனியான நடைமுறைகளைக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகையினை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிறசல்சுக்கு வலியுறுத்தவுள்ளார்கள்.
நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].
வெளிவிவகார அமைச்சு,

ஒஸ்லோ
16 ஓகஸ்ட் 2005
திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

அன்புடன் பிரபாகரனுக்கு,

அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.

சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.

எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.

இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.

01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.

02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.

04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.

05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
ஜான் பீற்றசன்


logo design

தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இருக்கவில்லையாம் !!

இலங்கையின் சமாதான முன்னெடுப்பில், இலங்கையரின் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைப் போக்கும், தமிழர்களுக்கான தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமையுமே அடிப்படை சவால்களாக அமைந்தன என சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது சமாதான முயற்சிகளில் அமெரிக்கா அதீத ஈடுபாடு காட்டியதுடன் திருப்தியும் வெளியிட்டது. இந்தியாவும் எமக்குச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.

என்னைப்பொறுத்த வரையில் அமெரிக்கா இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக மறைமுக நோக்கங்கள் அற்ற நேர்மையான ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்று சொல்வேன்.

சமாதான முயற்சிகள் யாவும் மிகவும் நுணுக்கமான முறையில் கையாளப்பட்டன. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பும் கிடைத்தது. எம்மிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கமாட்டார்களொன நாம் உறுதியாக நம்பினோம்.

ஆனால் சமாதான முன்னெடுப்பில் இரு அடிப்படையான சவால்கள் காணப்பட்டன. இதில் முதலாவது இலங்கையரின் கட்சிகளுக்கிடையி லான ஒத்துழையாமைப் போக்கு. அடுத்தது தமிழர்களுக்கான தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமை. இதனைப் பல நிகழ்வுகள் எமக்கு உணர்த்தின என அவர் மேலும் தெரிவித்தார்.

logo design

Sunday, December 26, 2010

அமெரிக்காவின் நெருக்கடி எதிரொலி: பாகிஸ்தானில், தலிபான் கமாண்டர் கைது


பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மலைப்பகுதி தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர்கள் தனி ஆதிக்கம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி அழித்து வருகிறது.


இருந்தும் அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அவர்களுக்கு பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவு இருப்பதே காரணம் என அமெரிக்கா கருதுகிறது. இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானின் தலிபான் கமாண்டர் நசிருதீன் ஹக்கானி என்பவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. இவர் தலிபான் கமாண்டர்களின் தலைவர் ஆவார். இவர் வெளிநாடுகளில் இருந்து தங்கள் அமைப்புக்கு பணம் வசூலிக்கும் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார்.

இவர் பெஷாவரில் இருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கு 4 தீவிரவாதிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள நசிருதீன் ஹக்கானி தலிபான்களின் முக்கிய தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்.

அமெரிக்காவின் நெருக்கடியால் தான் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே, நசிருதீன் ஹக்கானி கைது செய்யப்பட்ட தகவலை பாகிஸ்தான் அரசு இதுவரை வெளியிட வில்லை. ரகசியமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
logo design

Saturday, December 25, 2010

மட்டு, திருமலையில் வெள்ளம்! சுமார் மூவாயிரம் பேர் பாதிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக இது வரை சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,800 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர் எனவும் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருமை நாயகம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.அவர் எமக்கு மேலும் தகவல் தருகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 1800 பேர் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. செங்கலடி, கிரான் பகுதிகளிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.இது இவ்வாறிருக்க, திருகோணமலை மாவட்டத்திலும் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.இவ்வாறானவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலர் உணவும் வழங்கப்பட்டுள்ளன. எனத் தெரிவிக்கப்படுகிறது.


கணணி தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளை அனுப்பலாம் எண்சோதிட முறையில் பெயர் மாற்றுதல்களுக்கும் தொடர்பு கொள்ளவும் .

பறக்கும் மீன்கள் /வீடியோ - Flying Fish in Taiwan.

தாய்வானில் உள்ள லண்யு தீவில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை தோன்றும் இம் மீன்கள் பறக்கும் தன்மை கொண்டவை வீடியோவை பாருங்கள் .Thursday, December 23, 2010

அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களில் கவிழ்ந்து விடும்: அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களுக்குள் கவிழ்ந்து விடும் என்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வு கூறியுள்ளார்.
தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரமொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டதாக அதில் கலந்து கொண்டிருந்த எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அமைச்சரவைப் பொறுப்புகளின் அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டமை, முக்கிய அமைச்சர்களை சிரேஷ்ட அமைச்சர்களாக்கி ஓரங்கட்டியமை, கட்சிக்குள் வலுத்து வரும் தலைமைத்துவ சர்வாதிகாரம் மற்றும் அரசாங்கத்தினுள் ஜனாதிபதியின் எதேச்சாதிகார போக்கு என்பனவே அரசாங்கம் கவிழ்வதற்கான காரணங்களாக அமையலாம்  என்று அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

2001ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமமானது போல் இல்லாவிட்டாலும், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவதைத் தடுத்து நிறுத்த முடியாது போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் எதேச்சாதிகார போக்கு மற்றும் மோசடிகள் காரணமாக நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களும், சம்பள உயர்வின்மை காரணமாக அரசாங்க ஊழியர்களும் அரசாங்கத்துடன் முரண்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான நெருக்கடிகள் காரணமாக எதிர்வரும் இரண்டொரு வருடங்களுக்குள் அரசாங்கத்திற்குள் கருத்து மோதல் வலுத்து கவிழ்ந்து விடும் என்றவாறு அவர் எதிர்வு கூறுகின்றார்.

அது மாத்திரமன்றி ரணில்- சஜித் கருத்தொற்றுமை காரணமாக தற்போது இளம் தலைமுறையின் வாக்காளர்கள் மாத்திரமன்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்வதற்குத் தயாராக இருப்பதையே நாட்டின் அண்மைய நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா? - 'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம்

இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றுள்ளன!

'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்த ஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்தில் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டதையும், விக்கிலீக்ஸ் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

'புலிகள் என்று சந்தேகப்படுபவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்தார். சிறுவர்களைத் தனது ஆயுதக் குழுவில் கட்டாயப்படுத்தி கருணா சேர்த்தார். வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்துக்கொள்ள இந்த இரு ஆயுதக் குழுக்களுக்கும் கோத்தபாய ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்தார்!’ என்று சொல்கிறது விக்கிலீக்ஸ்.

உச்சகட்டமாக, 'போரினால் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டு இருந்த அப்பாவித் தமிழ்ப் பெண்களை, சிங்கள இராணுவத்தினரின் தேவைக்காகப் பலவந்தப்படுத்தி கருணா அனுப்பிவைத்தார்!’ என்று அமெரிக்க தூதர் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2005 கிறிஸ்துமஸ் தினத்தில், மட்டக்களப்பு தமிழ் எம்.பி-யான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதிலும், 2006 நவம்பர் 10-ம் தேதி இன்னொரு எம்.பி-யான நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதிலும்... கருணா ஆட்களின் பங்கு இருப்பதாகத் தன்னிடம் சிலர் கூறியதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டு உள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.

டக்ளஸைப் பற்றியும் விலாவாரியாக விவரிக்கும் ஓ ப்ளேக், கருணாவைப் பற்றிய முக்கிய தகவலைச் சொன்னதுதான் இந்த தகவலில் ஹைலைட்! 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ல் பிரிந்த கருணா, 4,000 பேருடன் வெளியில் வந்தார். இதனால், புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைத்தார் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா.
பிறகு, தமிழ்நாட்டில் இருந்து 2006 ஜூலையில்தான் கருணா இலங்கைக்குத் திரும்பினார். இலங்கையில் இல்லாத காலகட்டத்திலும், கருணா வெளிநாட்டில் இருந்தபடியே தன் ஆயுதக் குழுவை இயக்கிக்கொண்டு இருந்தார்!’ என்று அமெரிக்கத் தூதரே சொல்லி இருக்கிறார்.

இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்த விவகாரம் பெரிதாக எழுந்துவிடாமல் அமுக்கப்பட்டது. இப்போது அமெரிக்க தூதர் ஒருவரே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கருணா, தமிழகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, இங்கு பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையிலான 'ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ எனப்படும் ஈ.என்.டி.எல்.எஃப்-ம், கருணாவின் 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ எனப்படும் டி.எம்.வி.பி-யும் இணைந்து 'தமீழீழ ஐக்கிய விடுதலை முன்னணி’ எனும் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள்.

இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, தமிழகத்தில் இந்த சேர்க்கை மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. தமிழகத்தில் நிலவிய புலி ஆதரவை உடைக்கும்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரியங்கள் நடத்தப்பட்டன.
இங்கு நடக்கும் ஈழத் தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில், இந்தக் குழுவினர் கலந்துகொண்டு 'கருணா வெளியேறியது நியாயமே’ என்று விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும், வெளியீடுகளையும் விநியோகம் செய்வதில் தீவிரம் காட்டினர். சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாவைப் பற்றிய பிரசுரத்தை இக்குழுவினர் விநியோகிக்க முயன்றபோது, பெரியார் தி.க. அமைப்பினர் அதை எதிர்த்ததால், பிரச்சினை ஏற்பட்டது.

கடைசியில் கருணா ஆதரவாளர்கள் அங்கு இருந்து விரட்டப்பட்டனர். ம.தி.மு.க. ஊர்வலம் ஒன்றிலும் இதேபோலப் பிரசாரம் நடத்த முயன்றபோது கருணா ஆதரவாளர்களுக்கும், ம.தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. மாவீரர் நாளில் புலிப் போராளிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் உரையைப்போலவே, கருணாவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் போன்ற ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது.

'தமிழகத்தில் 150 வீடியோ கேசட்டுகள் தயாரிக்கப்பட்டு, 30 ஆயிரம் படிகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில் இவற்றை விநியோகிக்கவும் செய்தனர். பிரபாகரனை ஹிட்லராகச் சித்தரித்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அகதி முகாம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன.
கருணா ஆதரவாளர்களின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் கோபமும் ஆவேசமும் அடைந்தனர். கருணா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் ஆபத்து உண்டானது!’ என இலங்கை ஆய்வாளர் ஒருவரே அப்போது எழுதினார்.

கருணா குழுவின் இந்த எதிர்ச் செயல்பாடுகளால் புலிகளின் தலைமை கடும் கோபமடைந்தது. 'எதிரி’களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.

இதற்கிடையில், தமிழகத்தில் சேர்ந்து இயங்கிய கருணா, பரந்தன் ராஜன் குழுவினர் இங்கு இருந்தபடியே இலங்கையிலும் நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள். இதற்காக, தமிழகத்தில் 18 ஆண்டுகள் தங்கி இருந்த பரந்தன் ராஜன் குழுவின் முக்கிய ஆளான ரங்கப்பா என்பவர் இலங்கைக்குச் சென்றார். அங்கு போய் சிறிது காலத்திலேயே கொழும்பு புறநகர்ப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார்.

ராஜன் குழுவின் முக்கிய மூளையாக செயல்பட்ட மனோ மாஸ்டர் என்பவரும் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். திடீரென அவரும் கடத்தப்பட்டார். கருணாதான் அவரைக் கடத்தியதாக மனோவின் தாயார் யாழ்ப்பாணம் மனித உரிமை கவுன்சிலில் முறையிட்டார். அவர் விஷயத்தில் இன்று வரை சரியான தகவலே இல்லை.

இலங்கையில் இப்படி கருணா ஆதரவாளர்களுக்கு எதிரான 'நடவடிக்கைகள்’ தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் 2004 டிசம்பர் 5-ம் தேதி பரந்தன் ராஜன் உள்பட அவரது குழுவினர் ஒன்பது பேர் திடீரெனக் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். 'அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன.

குடும்பத்தினருடன் பல மணி நேரம் உரையாட அனுமதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டனர். டெல்லி தரப்பில் இருந்து அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பதிலுக்கு அவர்கள், 'விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராட 3,500 போராளிகள் தயார், என ஆதரவு கேட்டனர் என்று இலங்கை பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதினார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மீண்டும் இந்தியாவுக்குள் வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போன மச்சான் திரும்பிவந்த கதையாக, சில மாதங்களில் கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேபோனது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க முடியாமல் கருணா ஆதரவாளர்கள் தவித்தனர். அந்த நேரத்தில், பரந்தன் ராஜன் பெங்களூருவில் 'இந்திரா சர்வதேச அகடமி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்துக்கு, டெல்லியில் இருந்து ஆசியும், ஆதரவும், உதவிகளும் பெருமளவில் வழங்கப்பட்டன என்பதை அந்தக் குழுவினரே பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு, '2006 ஜூலைவாக்கில் கருணா மீண்டும் இலங்கைக்குச் சென்றார்’ என்கிறது விக்கிலீக்ஸ் தகவல்.
'
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கு கருணா ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இயங்கினார்கள்’ என்று சொல்லும் இலங்கை ஆய்வாளர் ஒருவர், சமாதான ஒப்பந்தத்தை புலிகள் மீறியதாக நோர்வே அமைதிக் குழுவுக்கு கோடம்பாக்கம் முகவரியில் இருந்து மனோ மாஸ்டர் புகார் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார்.

சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம்பாக்கம் பகுதிகளிலும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதரவாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் 90 கோடி மதிப்புள்ள ஒரு எஸ்டேட் இருக்கிறது.
தேடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி எஸ்டேட்தான் அவர்களின் முக்கிய மறைவிடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், 'எதிரி’களின் கண்ணிலும் படாமல் அந்த எஸ்டேட்டில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான 'ஏற்பாடுகள்’ பலமாக வழங்கப்பட்டு இருந்தன. இதில்தான் கருணா தங்கி இருந்திருக்க வேண்டும்' என்கிறார்கள் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா?’ என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ விக்கிலீக்ஸ்!

Tuesday, December 21, 2010

கனடா வந்த பெண்ணிடம் புலிகளின் கழுத்துப் பட்டி!

கனடாவுக்கு எம்.வி. சன் சீ கப்பல் மூலம் சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என கனேடிய அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் செயற்பட்டவர் என்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கே உரித்தான கழுத்துப் பட்டி ஒன்றை வைத்திருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் இந்தப் பெண்ணின் விபரங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இவர் மீதான விசாரணைகள நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றன.

தற்போது இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பெண்களைக் கொன்று நர மாமிசம் உண்ட பிரித்தானியருக்கு ஆயுள் தண்டனை

குற்றவியல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதாகும் ஸ்டீபன் க்ரிப்பித்ஸ் 3 பெண்களை கொலை செய்ததாக சில தினங்களுக்கு முன் போலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லீட்ஸ் கிரௌன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.


பிராட்போர்ட், மேற்கு யோர்க்ஷிர் பகுதியில் வசித்து வரும் இவர் வீட்டிற்கு அருகில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியில் உள்ள விபச்சார பெண்கள் மூவரை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை உண்டதாக கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார்.

Monday, December 20, 2010

எண்ணி ரெண்டே வருஷத்தில்.. படுபயங்கர சூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்

உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012 ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும் பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம்.
கி.மு. 3113 ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர்.
 


Sunday, December 19, 2010

குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் - அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி : அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

Friday, December 17, 2010

எனது வேலையை தொடர்ந்து செய்வேன் - விடுதலையான பின் அசாஞ்சே (Photos-Vedio)

Assange Juliyan-லண்டனில் உள்ள Westminster Magistrates உயர் நீதிமன்றத்திலிருந்து  சட்டதிட்டங்கள் அடங்கிய பேப்பரை கையில் உயர்த்தி பிடித்தபடி புன்சிரிப்புடன் வெளியில் வந்தார் ஜூலியன் அசாஞ்சே."லண்டனின் தூய்மையான காற்றை மீண்டும் சுவாசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இல்லாத போது எனது குழுவினர்க்கும் , எனக்கும் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

Wednesday, December 15, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் மனோ கணேசனை தூது அனுப்பிய சந்திரிகா!


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும் இடையிலான தூதுவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியும் ஆன மனோ கணேசன் செயல்பட்டு உள்ளார்.

Tuesday, December 14, 2010

சாமியார் நித்தியானந்தா அறையில் ஆணுறை ,பெண் பரபரப்பு வாக்குமூலம் !

சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்கு மூலத்தையும் இணைத்துள்ளனர்.

பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.

விக்கிலீக்ஸ் அதிபருக்கு(assange julian) பிணை!


.                பிரித்தானிய காவல்துறையினரிடம் சரணடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகரான ஜூலியன் அசான்ச் அவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக ஜூலியன் அசான்ச் மீது தோண்டியெடுக்கப்பட்ட சுவீடன் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
இது தொடர்பில் விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், ஜூலியன் அசான்ச் பிரித்தானிய பொலிஸாரிடம் சரணடைந்தார்.
பிரித்தானிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஜூலியன் அசான்ச் அவர்களின் வழக்கு இன்று 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட ஜூலியன் அசான்ச் மீது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது.

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting