Saturday, December 25, 2010

மட்டு, திருமலையில் வெள்ளம்! சுமார் மூவாயிரம் பேர் பாதிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக இது வரை சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,800 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர் எனவும் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருமை நாயகம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.



அவர் எமக்கு மேலும் தகவல் தருகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 1800 பேர் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.



இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. செங்கலடி, கிரான் பகுதிகளிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.



இது இவ்வாறிருக்க, திருகோணமலை மாவட்டத்திலும் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.



இவ்வாறானவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலர் உணவும் வழங்கப்பட்டுள்ளன. எனத் தெரிவிக்கப்படுகிறது.










கணணி தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளை அனுப்பலாம் எண்சோதிட முறையில் பெயர் மாற்றுதல்களுக்கும் தொடர்பு கொள்ளவும் .

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting