Monday, December 27, 2010

தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இருக்கவில்லையாம் !!

இலங்கையின் சமாதான முன்னெடுப்பில், இலங்கையரின் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைப் போக்கும், தமிழர்களுக்கான தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமையுமே அடிப்படை சவால்களாக அமைந்தன என சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது சமாதான முயற்சிகளில் அமெரிக்கா அதீத ஈடுபாடு காட்டியதுடன் திருப்தியும் வெளியிட்டது. இந்தியாவும் எமக்குச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.

என்னைப்பொறுத்த வரையில் அமெரிக்கா இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக மறைமுக நோக்கங்கள் அற்ற நேர்மையான ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்று சொல்வேன்.

சமாதான முயற்சிகள் யாவும் மிகவும் நுணுக்கமான முறையில் கையாளப்பட்டன. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பும் கிடைத்தது. எம்மிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கமாட்டார்களொன நாம் உறுதியாக நம்பினோம்.

ஆனால் சமாதான முன்னெடுப்பில் இரு அடிப்படையான சவால்கள் காணப்பட்டன. இதில் முதலாவது இலங்கையரின் கட்சிகளுக்கிடையி லான ஒத்துழையாமைப் போக்கு. அடுத்தது தமிழர்களுக்கான தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமை. இதனைப் பல நிகழ்வுகள் எமக்கு உணர்த்தின என அவர் மேலும் தெரிவித்தார்.





logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting