நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகின்றது. ரசிகர் மன்ற மாநாட்டை விரைவில் கூட்டி புது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று செய்தி பரவியுள்ளது. இது பற்றி விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நான் நினைத்ததை விட மிகப்பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்கார வைத்துள்ளனர். இது போல் இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமர வைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. மற்றவர்கள் பேச்சை கேட்டு நான் செயல்படுவது இல்லை. அரசியலில் இறங்குவதற்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டுக் கொண்டு வருகிறேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர் கடவுள். சாதாரண மனிதர்களால் அதை தடுக்க முடியாது. நான் இது போன்று பேசுவதால் என் வீட்டில் கல் எறியப்படலாம். என்னை வழி மறித்து தாக்கவும் செய்யலாம். எந்த ஆபத்து வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். காவலன் படத்துக்கு பல தடைகள் வந்தன. அதையெல்லாம் மீறி படம் வந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்தார்கள் படம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு விஜய் கூறினார். |