சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு போட்டியாக மற்றுமொறு புதிய இணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைய தளத்திற்கு ஓபன்லீக் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் பலவற்றை வெளியிட்டு பெரும் பரப்பரப்பை விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அதன் தலைவர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தலைவர் அசாங்கேயின் நெருக்கமானவராக இருந்த டேனியல் டோஸ்சிட் என்பவராலேயே இந்த புதிய இணையம் செயற்படவுள்ளது.
இந்த இணையம் விக்கிலீக்சுக்கு போட்டியாக அதே பாணியில் இரகசியங்களை வெளியிடவுள்ளது. ஓபன்லீக்ஸ் என்ற இந்த இணையம் 2011 ஆம் ஆண்டு முதல் தமது சேவையை தொடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.