Thursday, May 5, 2011

அமெரிக்காவிடமிருந்து ஒசாமாவை(osama)பலமுறை தப்ப வைத்த ஐஎஸ்ஐ-விக்கிலீக்ஸ்

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பலமுறை தப்ப வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனால் தான் இந்தமுறை பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே பின்லேடனை அமெரிக்கப் படைகள் தாங்களே வந்து அழித்தாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தூதரங்களுக்கு இடையிலான ரகசிய கேபிள் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், குவாண்டநாமோ பே சிறையில் உள்ள சிலர் மூலமாகவே பின்லேடனின் புதிய இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறையில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சபீ்ர் லால் மெல்மா என்பவர், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ உதவியோடு பின்லேடனை காபூலில் இருந்து காப்பாற்றி பாகிஸ்தானுக்குள் அழைத்துச் சென்றது குறித்த விவரங்களை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லை வரை அவர்களை தானும் தனது கூட்டாளிகளும் அழைத்துச் சென்றதாகவும், எல்லைப் பகுதியில் அவர்களை ஐஎஸ்ஐ உளவாளிகள் வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஒசாமாவின் இருப்பிடம் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்து அதை பாகிஸ்தான் அரசுடன் பகிர்ந்து கொண்டபோதெல்லாம், ஒசாமைவை ஐஎஸ்ஐ இடம் மாற்றி, காப்பாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் விமான நிலையங்கள் வழியாகக் கூட அல் கொய்தா தலைவர்களை ஐஎஸ்ஐ பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
பாகிஸ்தான் நம்பிக்கையான நாடு அல்ல-சிஐஏ:
இந் நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் தலைவர் லியோன் பனெட்டா கூறுகையில், பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை.

நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.

பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு அல்ல.
என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும்:
என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். அது ஒரு குழப்பமான காரணங்கள் கொண்ட நட்பு. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.
எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும் என்றார்.

logo design

Tuesday, May 3, 2011

பின் லேடன் முகமும்,பின்தொடர்ந்த சந்தேகங்களும் !

நேற்று பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து அவர் தலையில் சுடப்பட்டு இறந்தது போன்ற ஓர் புகைப்படம் உலகையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.பின் லேடன் இறந்த புகைப்படத்தை,அமெரிக்கா அதிகார பூர்வமாக இன்னும் வெளியிடாத நிலையில், ஏனைய இணையதளங்களும்,இணைய செய்திகளும், தொலைக்காட்சி,செய்தித்துறை ஊடகங்களும் இணையத்தில் வெளியான ஓர் புகைப்படத்தை வெளியிட்டன.அதனைத் தொடர்ந்து இணையங்களிலும்,சமூக வலைப்பின்னல்களிலும் பரபரப்பு விவாதங்கள் பற்றிக்கொண்டன.நெற்றியில் சுட்டிருக்கிறார்கள் போலும்.?இல்லை கண்பகுதியில்?என்பது போன்று.மறுபுறம் இது உண்மையான புகைப்படமா?போலியா என்று ?
பல மணி நேர ஆராய்ச்சிக்குப் பின்னும்,சில இணைய தளங்கள் அந்த புகைப்படம் போலி என உறுதி செய்யப் பட்ட பின்னுமே ஒருவாறு முடிவுக்கு மக்களால் வர இயன்றது.கடைசியாக பார்த்தால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பே இணையங்களில் உலவிய புகைப்படமாம்.
இப்படி மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்புவதற்கான காரணம் பொறுப்பற்ற தொலைக்காட்சி ஊடகங்களும்,செய்த்தித்தாள் நிறுவனங்களுமே.உண்மையா என உறுதி செய்யாத ஓர் புகைப்படத்தை எடுத்து அதை மக்கள் மத்தியில் பரப்பி,பரபரப்பை ஏற்ப்படுத்தி வியாபாரம் செய்வது.ஒரு நிகழ்வு நடக்கும் போது ஓர் சாதாரண மனிதன் கூட அது உண்மைதானா?அதற்கு ஆதாரம் இருக்கிறதா என அறிய முயற்சிப்பான்.ஆனால் பொறுப்புள்ள ஊடகங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றன பாருங்கள்!

logo design

Monday, May 2, 2011

கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் புகைப்படம் பொய்யானது ஆதாரம் இணைப்பு

ஆதாரமான புகைப்படம் இணைப்பு ஒற்றுப் பாருங்கள் இரண்டு கண்களினூடாக குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்ட முகத்துடன்கூடிய படமும் உயிருடன் இருக்கும் போது எடுத்த படமும் ஓரமாதிரி பல் மீசை மேலும் பல ஒற்றுமையுடன் .இரண்டு படங்களினதும் ஒவ்வொரு பகுதியையும் உற்றுப்பாருங்கள் .

logo design

logo designவாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிபிஐ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிபிஐவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில்ன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பின்லேடனின் 2 மனைவிகள் கைது

 logo design

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமாபாதுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர்,

இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒசாமாவின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் மற்றும் அவருக்கு நெருக்கமான 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக துன்யா தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒசாமா பின்லேடன் (Osama bin Laden) கொலை !படம்-வீடியோ இணைப்பு

அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின் லேடனின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. எனினும் இவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒசாமா சுட்டுக்கொல்லப்பட முன் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம் என இப்புகைப்படத்தை வெளியிட்ட கருத்து
தளங்களில் (Forums) பலர் கருத்துப்பதிவு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒசாமாவின் உடலம் ஆப்கானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து உறுதிப்படுத்தும் எனவும் அமெரிக்க தகவல்கள் கூறியிருந்தன.
இது தொடர்பில் News X செய்தி சேவை தெரிவிக்கையில்
உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக அமெரிக்காவால் வர்ணிக்கப்படும், அல் கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை நேற்று (ஞாயிற்றுகிழமை) நள்ளிரவு, அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்த்தான் தலைநகர் இஸ்லாமாபத்திலிருந்து வடக்கே 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் மாளிகையில் தனது குடும்பத்தினருடன் அவர் தங்கியிருந்த போதே, அமெரிக்க இராணுவத்தினரின் ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இத்தாக்குதலில் பாகிஸ்த்தானின் உளவாளிகளும் பங்கெடுத்ததாக பாகிஸ்த்தான் புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் தலையில் சூடு
நேற்று நள்ளிரவு, அங்கு தான் ஒசாமா இருப்பதாக தகவல் உறுதிப்பட கிடைத்ததும், சட்டென அங்கு விரைந்த அமெரிக்க புலனாய்வு படையினர், ஒசாமா தங்கியிருந்த பகுதியை துல்லியமாக கணித்து துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். ஒசாமா தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் .
எனினும் அமெரிக்க படையினரின் இடைவிடாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில், ஒசாமா பின்லாடனின் தலையில் குண்டுபாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார்.  அவருடன் மேலும் மூன்று ஆண்களும், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
40 நிமிடங்கள் வரை மாத்திரமே இந்த மிஷன் நடந்தேறியது. அமெரிக்க தரப்பில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. எனினும் அங்கு ரேய்டு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறினால் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ஹெலிகாப்டர் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கே இந்த மிஷன் பற்றி தெரியாது?
ஒசாமா மீது தாக்குதல் நடத்த போவதை, பாகிஸ்த்தான் உட்பட்ட எந்த நாட்டுக்கும் அமெரிக்கா அறிவித்திருக்கவில்லை என்பதும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஒரு சிறிய குழுவினருக்கு மாத்திரமே, சம்பவ நேரம் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒசாமா தரப்பினருக்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினர் வரை உளவாளிகள் இருப்பதால், எந்த நேரத்திலும் அவர்கள் விழிப்படைந்து விட கூடும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒசாமா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒமா விடுத்த அறிக்கை
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்,
‘இன்றிரவு, என்னால் அமெரிக்கர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அறிவித்தலை கூறமுடியும். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்ட தீவிரவாத குழு தலைவர் ஒசாமா பின்லாடன், அமெரிக்க படைகள் முன்னெடுத்த ஓர் தாக்குதல் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய உடலமும் தற்போது சிறைகாப்புக்கு (Custody) கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லாடனின் இறப்பானது எமது குறிப்பிடத்தக்க ஓர் வெற்றியாகும். நாங்கள் மீண்டும் கூறுகிறோம். இது இஸ்லாம் மதத்திற்கு எதிரான போரல்ல. பின்லாடன் இஸ்லாமியர்களின் மத தலைவரும் அல்ல. அவர் இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்’.
என அவர் தெரிவித்தார். இவ் அறிவித்தலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் மாளிகை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள், ஒசாமாவின் படுகொலைக்கு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
புஷ்ஷின் சபதம் நிறைவேறியது
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், இத்தாக்குதலை பெரும் சிறப்பு வாய்ந்த தாக்குதலாக வர்ணித்துள்ளார். எவ்வளவு காலம் எடுத்தது என்பது முக்கியமல்ல. நீதி தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே இதில் குறிப்பிடவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
2001 இல் அமெரிக்க செப்டெம்பர் 11 தாக்குதலின் போது, அதிபராக இருந்த புஷ், மிக உணர்ச்சிவசப்பட்டவராக ஒசாமா பின்லாடன் உயிரோடோ, பிணமாகவே எமக்கு வேண்டும் என சபதமெடுத்திருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
கொல்லப்பட்டது ஒசாமாவா?
கொல்லப்பட்டது ஒசாமா தான் என அல் கைதா தரப்பினரால் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்த்தான் சாயம் வெளுத்தது!?
இதேவேளை இவ்வளவு நாளும் ஒசாமாவை பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தது பாகிஸ்த்தானே என்பது இஸ்லாமாபாத்தில் வைத்து ஒசாமா கொல்லப்பட்டதற்கு இது நல்ல சான்று எனவும், இதன் மூலம் பாகிஸ்த்தானின் சாயம் வெளுத்துவிட்டதாகவும், இந்திய தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
1997ம் ஆண்டு அமெரிக்க ஒசாமா பின் லேடனை சி.என்.என் தொலைக்காட்சி செவ்வி கண்ட போது

Monday, March 14, 2011

கேரள இடுக்கி மாவட்டத்தில் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு திட்டம் ?

இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இடுக்கி மாவட்ட காட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கேரள விமான நிலையத்தைப் பயன்படுத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இடுக்கி காட்டுப் பகுதி தமிழக மாநிலத்தின் எல்லைப் பகுதியை அண்டி அமைந்துள்ளதாகவும் பெரியார் அணையையும் குறித்த காட்டுப் பகுதியையும் புலிகள் பயன்படுத்தக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
குறித்த பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் தொடர்பில் வெளியான செய்திகளை இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் முற்று முழுதாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

logo design

2ஆம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு! 3 ஆவது நாளாக மீண்டும் உலுக்கிய பூகம்பம் (வீடியோ இணைப்பு)

ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.

தற்போது ஜப்பான் மக்கள், சுனாமி மற்றும் அணு உலைகள் வெடிப்பால் உலகப் போர் பேரழிவை விட அதிகமான அழிவை சந்தித்துள்ளனர்.

பொருட்சேதம் அளவிட முடியாத அளவுக்கு உள்ளது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் மக்களை நில அதிர்வுகளும், பூகம்பங்களும் தொடர்ந்து பீதியில் ஆழ்த்தி உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை பூகம்பம் ஏற்பட்ட பிறகு இது வரை சுமார் 175 தடவை நில அதிர்வு ஏற்பட்டு விட்டது. நேற்று முன்தினம் 2 தடவை பூகம்பம் ஏற்பட்டது.

நேற்று காலையிலும் ஜப்பான் கிழக்கு கடலோரத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் ஜப்பானில் முக்கிய பெரிய தீவான ஹோன்சுவை மையமாக கொண்டு ஏற்பட்டது.

இது பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவு உலகில் 7-வது பெரிய தீவாக கருதப்படுகிறது. தீவின் கடலோரத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பீதி கிளம்பியது.

இதனால் கடலோர மக்கள் பாதுகாப்பான இடம் தேடி சென்றனர். சில மணி நேரம் கழித்து சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட் டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக உலுக்கும் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளில் இந்த தீவு சுமார் 8 அடி நகர்ந்து விட்டது.

ஜப்பான் வட பகுதி கடலோர ஊர்கள் முழுவதும் சேறும் சகதியுமாக கிடக்கின்றன. சாலைகளில் கார்களும், கண்டெய்னர்களும் குப்பைகளாக மாறி கிடக்கின்றன. மக்களிடம் தொடர்ந்து பீதி காணப்படுகிறது

logo design

Wednesday, March 9, 2011

தமிழ்செல்வனின் பிரத்தியேக உதவியாளரின் மனைவியை கரம் பிடிக்க துடிக்கும் சீமான்.

புலிகளியக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் பிரத்தியேக உதவியாளராக செயற்பட்டுவந்த அலெக்ஸ் என்பவரின் மனைவியை கரம்பிடிப்பதற்கு இந்திய சினிமா இயக்குனர் சீமான் முயன்றுவருவதாக தெரியவருகின்றது. 

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோது தமிழ் செல்வன் கலந்து கொண்ட சகல வெளிநாட்டு பேச்சுக்களிலும் அலக்ஸ் கலந்து கொண்டவர். புலம்பெயர் தேசங்களில் புலிகளின் முதலீடுகள் பலவற்றை தமிழ் செல்வனே மேற்கொண்டதுடன் அவை தொடர்பான பல விடயங்கள் புலிகளின் தலைமைக்கு தமிழ் செல்வனால் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இம்முதலீடுகள் தொடர்பான சகல விடயங்களையும் அலெக்ஸ் அறிந்து வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகின்றது. அத்துடன் பெரும்பாலான முதலீடுகள் தமிழ் செல்வன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் குடும்ப அங்கத்தவர்கள் பலரின் பெயரில் முதலிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இம்முதலீடுகள் தொடர்பாக அலக்ஸின் மனைவி அறிந்திருக்கமுடியும் என நம்பும் சீமான் அலக்ஸின் மனைவியை கரம்பிடிப்பதன் முலம் தமிழ்செல்வன், அலக்ஸ் குழுவினரின் முதலீடுகளை கையாள முடியும் என்ற புது வியூகம் ஒன்றினை வகுத்துள்ளதாக தெரியவருகின்றது. 

புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் சாமாதான ஒப்பதம் செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியா சென்றிருந்த அலக்ஸின் மனைவியார் சீமானின் மேற்பார்வையில் அங்கு தங்கியிருந்ததுடன் அக்கால கட்டத்தில் அவர்கள் இருவருக்குமிடையே உருவான நட்பினை பயன்படுத்தி சீமான் தற்போது அவரை தனது சித்துவிளையாட்டை ஆரம்பித்துள்ளதாக நம்பமுடிகின்றது. 

அலக்ஸின் துணைவியார் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரை அங்கிருந்து மீட்பதற்காக சீமான் பல லட்சம் ரூபாய்களை செலவிட்டதாகவும் அறியமுடிகின்றது. 

logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Cheap Web Hosting