குற்றவியல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதாகும் ஸ்டீபன் க்ரிப்பித்ஸ் 3 பெண்களை கொலை செய்ததாக சில தினங்களுக்கு முன் போலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லீட்ஸ் கிரௌன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
பிராட்போர்ட், மேற்கு யோர்க்ஷிர் பகுதியில் வசித்து வரும் இவர் வீட்டிற்கு அருகில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியில் உள்ள விபச்சார பெண்கள் மூவரை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை உண்டதாக கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார்.
சுசேன் ப்ளமிர்ஸ், ஷெல்லி அர்மிடேஜ் , சூசன் ருஷ்வோர்த் ஆகிய மூன்று பெண்களையும் குற்றவியல் ஆராய்ச்சிக்காக கொலை செய்ததாகவும் ப்ளமிர்ஸ் என்ற பெண்ணின் உடல் பாகங்களை உண்டதாகவும் இன்று கோர்ட்டில் ஒப்புக் கொண்ட ஸ்டீபனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஸ்டீபனின் மன நிலை குறித்த பிரச்சினை எழுந்ததால் மனநல சோதனையும் செய்யபப்ட்டது.
சோதனை செய்த மருத்துவர்கள் ஸ்டீபன் மனநிலை மோசமாகவே இருப்பதாக கூறினாலும் கூட கொடுமையான வார்த்தைகளால் விவரிக்க முடியாத குற்றங்களை செய்ததற்காகவும் மேலும் பல பெண்களை காப்பாற்ற வேண்டியும் ஸ்டீபன் க்ரிப்பித்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment