Monday, December 27, 2010

வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச்(Assange Julian) ஒப்பந்தம்

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (29). அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ரகசியங்களை வெளியிட்டதால் இவர் தலைமறைவானார். இங்கிலாந்தில் பதுங்கியிருந்த இவர் மீது 2வீடன் பெண்கள் பாலியல் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் லண்டனில் உள்ள தனது நண்பரின் பங்களாவில் தங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளார். இதற்காக அவர் புத்தக நிறுவனங்களிடம் ரூ.7 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தகவலை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவீடனை சேர்ந்த 2 பெண்கள் என் மீது “செக்ஸ்” புகார் கூறியுள்ளனர். அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.14 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். இந்த வழக்கை நடத்த இன்னும் அதிக அளவு பணம் தேவைப்படுகிறது.

அதற்கான பணம் சேர்க்கதான் நான் எனது சுயசரிதையை எழுத இருக்கிறேன். அமெரிக்காவை சேர்ந்த புத்தக பதிப்பாளர் ஆல்பிரிட் ஏ. நாப் என்பவரிடம் ரூ.4 கோடியும், இங்கிலாந்தை சேர்ந்த பதிப்பாளரிடம் ரூ.3 கோடியும் பெற்றுள்ளேன் என்று கூறினார்.

எனது சுயசரிதை புத்தகத்தில் சுவீடன் பெண்கள் என் மீது கூறியுள்ள “செக்ஸ்” புகார் பற்றி எழுத மாட்டேன். மற்றபடி என் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை எழுதுவேன் என்றார். இதன் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting