முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும் இடையிலான தூதுவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியும் ஆன மனோ கணேசன் செயல்பட்டு உள்ளார்.
2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தார்.ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிதான் ஆட்சி நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
2004 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்த மனோ கணேசனை இவர் அழைத்தார். புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் தூது செல்ல வேண்டும் என்று கேட்டார்.
மனோவும் ஒப்புக் கொண்டார். ஐக்கிய தேசிய முன்னணி அரசினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் புதிய அரசினாலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதுதான் கொண்டு செல்ல வேண்டிய தகவல்.
கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று இத்தகவலை புலிகளின் தலைவரிடம் சொன்னார் மனோ. இவ்வளவு விடயத்தையும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் மனோ பகிரங்கமாகத் தெரிவித்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment