"விக்கிலீக்ஸ்' ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ்சே சுவீடனுக்கு அனுப்பப்பட்டால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளுக்காக சுவீடனுக்கு ஜூலியன் அஸேஞ்சை அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே அவரது சட்டத்தரணிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஜூலியன் அஸேஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அந்நாட்டு இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது சட்டத்தரணியான ஜியோப்ரி ரொபேர்ட்ஸன் கூறினார்.
மேலும் சுவீடனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஸேஞ்சே (39 வயது) மறுப்பு தெரிவித்துள்ளார்.
லண்டனிலுள்ள பெல்மார்ஷ் நீதவான் நீதிமன்றில் ஜூலியன் அஸேஞ்சே தொடர்பான இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜூலியன் அஸேஞ்சே சுவீடனிலிருந்து நாடு கடத்தப்படமாட்டார் என்பதை சுவீடன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டுமேன அஸேஞ்சேவின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்
லண்டன் ரூட்டிங் பகுதியில் வீதியில் செல்லும் பல பெண்கள் மேல் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல பாலியல் தாக்குதலுக்கு ஒரு நபரே பொறுப்பு என்றும், அது நடைபெறுகின்ற விதம், மற்றும் இடம் என்பனவற்றை ஆராய்ந்த பொலிசார் தொடர் பாலியல் குற்றங்கள் புரிபவரை வீதியோர வீடியோக் கமராவில் பதிவுசெய்துள்ளனர். அவர் நடமாட்டத்தையும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் அவர் ஒரு தமிழர் என்று இனம் காணப்பட்டுள்ளார். லண்டன் டூடிங் மற்றும் மிச்சம் பகுதிகளில் இந்த மர்மத் தமிழரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் செல்லும் பெண்ணை ஏதாவது ஒரு விதத்தில் கதையக் கொடுத்து, பின்னர் அவரை மறைவான இடத்துக்கு இவர் இழுத்துச் செல்வதாகவும் பின்னர் அவர்கள் மேல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பதாகவும் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சுமார் 5 பெண்கள் மேல் இவர் பாலியல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் இத் தாக்குதலை நடத்தும் தமிழரின் மரபணுக்களை(DNA) பொலிசார் தற்போது எடுத்துள்ளனர். இருப்பினும் குற்றவாழியை கண்டறிய முடியவில்லை.
இதனால் அவர்கள் தமிழ் சமூகத்தினரின் உதவியையும் நாடியுள்ளதோடும், அவரைக் கண்டுபிடித்து தந்தால் 10,000 பவுண்டுகளைச் சன்மானமாக வழங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். மிகவும் ஆபத்தான இவரை எவராவது இனம் கண்டால் உடனடியாக கிரைம் ஸ்டாப்பேஸ் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. இருப்பினும் பொலிசார் தற்போது மீண்டும் மக்களின் உதவியை நாடியுள்ளனர்