Saturday, December 25, 2010

மட்டு, திருமலையில் வெள்ளம்! சுமார் மூவாயிரம் பேர் பாதிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக இது வரை சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,800 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர் எனவும் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருமை நாயகம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.அவர் எமக்கு மேலும் தகவல் தருகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 1800 பேர் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. செங்கலடி, கிரான் பகுதிகளிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.இது இவ்வாறிருக்க, திருகோணமலை மாவட்டத்திலும் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.இவ்வாறானவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் உலர் உணவும் வழங்கப்பட்டுள்ளன. எனத் தெரிவிக்கப்படுகிறது.


கணணி தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளை அனுப்பலாம் எண்சோதிட முறையில் பெயர் மாற்றுதல்களுக்கும் தொடர்பு கொள்ளவும் .

பறக்கும் மீன்கள் /வீடியோ - Flying Fish in Taiwan.

தாய்வானில் உள்ள லண்யு தீவில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை தோன்றும் இம் மீன்கள் பறக்கும் தன்மை கொண்டவை வீடியோவை பாருங்கள் .Thursday, December 23, 2010

அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களில் கவிழ்ந்து விடும்: அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களுக்குள் கவிழ்ந்து விடும் என்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வு கூறியுள்ளார்.
தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரமொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டதாக அதில் கலந்து கொண்டிருந்த எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அமைச்சரவைப் பொறுப்புகளின் அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டமை, முக்கிய அமைச்சர்களை சிரேஷ்ட அமைச்சர்களாக்கி ஓரங்கட்டியமை, கட்சிக்குள் வலுத்து வரும் தலைமைத்துவ சர்வாதிகாரம் மற்றும் அரசாங்கத்தினுள் ஜனாதிபதியின் எதேச்சாதிகார போக்கு என்பனவே அரசாங்கம் கவிழ்வதற்கான காரணங்களாக அமையலாம்  என்று அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

2001ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமமானது போல் இல்லாவிட்டாலும், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவதைத் தடுத்து நிறுத்த முடியாது போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் எதேச்சாதிகார போக்கு மற்றும் மோசடிகள் காரணமாக நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களும், சம்பள உயர்வின்மை காரணமாக அரசாங்க ஊழியர்களும் அரசாங்கத்துடன் முரண்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான நெருக்கடிகள் காரணமாக எதிர்வரும் இரண்டொரு வருடங்களுக்குள் அரசாங்கத்திற்குள் கருத்து மோதல் வலுத்து கவிழ்ந்து விடும் என்றவாறு அவர் எதிர்வு கூறுகின்றார்.

அது மாத்திரமன்றி ரணில்- சஜித் கருத்தொற்றுமை காரணமாக தற்போது இளம் தலைமுறையின் வாக்காளர்கள் மாத்திரமன்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்வதற்குத் தயாராக இருப்பதையே நாட்டின் அண்மைய நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா? - 'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம்

இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றுள்ளன!

'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்த ஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்தில் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டதையும், விக்கிலீக்ஸ் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

'புலிகள் என்று சந்தேகப்படுபவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்தார். சிறுவர்களைத் தனது ஆயுதக் குழுவில் கட்டாயப்படுத்தி கருணா சேர்த்தார். வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்துக்கொள்ள இந்த இரு ஆயுதக் குழுக்களுக்கும் கோத்தபாய ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்தார்!’ என்று சொல்கிறது விக்கிலீக்ஸ்.

உச்சகட்டமாக, 'போரினால் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டு இருந்த அப்பாவித் தமிழ்ப் பெண்களை, சிங்கள இராணுவத்தினரின் தேவைக்காகப் பலவந்தப்படுத்தி கருணா அனுப்பிவைத்தார்!’ என்று அமெரிக்க தூதர் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2005 கிறிஸ்துமஸ் தினத்தில், மட்டக்களப்பு தமிழ் எம்.பி-யான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதிலும், 2006 நவம்பர் 10-ம் தேதி இன்னொரு எம்.பி-யான நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதிலும்... கருணா ஆட்களின் பங்கு இருப்பதாகத் தன்னிடம் சிலர் கூறியதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டு உள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.

டக்ளஸைப் பற்றியும் விலாவாரியாக விவரிக்கும் ஓ ப்ளேக், கருணாவைப் பற்றிய முக்கிய தகவலைச் சொன்னதுதான் இந்த தகவலில் ஹைலைட்! 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ல் பிரிந்த கருணா, 4,000 பேருடன் வெளியில் வந்தார். இதனால், புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைத்தார் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா.
பிறகு, தமிழ்நாட்டில் இருந்து 2006 ஜூலையில்தான் கருணா இலங்கைக்குத் திரும்பினார். இலங்கையில் இல்லாத காலகட்டத்திலும், கருணா வெளிநாட்டில் இருந்தபடியே தன் ஆயுதக் குழுவை இயக்கிக்கொண்டு இருந்தார்!’ என்று அமெரிக்கத் தூதரே சொல்லி இருக்கிறார்.

இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்த விவகாரம் பெரிதாக எழுந்துவிடாமல் அமுக்கப்பட்டது. இப்போது அமெரிக்க தூதர் ஒருவரே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கருணா, தமிழகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, இங்கு பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையிலான 'ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ எனப்படும் ஈ.என்.டி.எல்.எஃப்-ம், கருணாவின் 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ எனப்படும் டி.எம்.வி.பி-யும் இணைந்து 'தமீழீழ ஐக்கிய விடுதலை முன்னணி’ எனும் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள்.

இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, தமிழகத்தில் இந்த சேர்க்கை மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. தமிழகத்தில் நிலவிய புலி ஆதரவை உடைக்கும்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரியங்கள் நடத்தப்பட்டன.
இங்கு நடக்கும் ஈழத் தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில், இந்தக் குழுவினர் கலந்துகொண்டு 'கருணா வெளியேறியது நியாயமே’ என்று விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும், வெளியீடுகளையும் விநியோகம் செய்வதில் தீவிரம் காட்டினர். சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாவைப் பற்றிய பிரசுரத்தை இக்குழுவினர் விநியோகிக்க முயன்றபோது, பெரியார் தி.க. அமைப்பினர் அதை எதிர்த்ததால், பிரச்சினை ஏற்பட்டது.

கடைசியில் கருணா ஆதரவாளர்கள் அங்கு இருந்து விரட்டப்பட்டனர். ம.தி.மு.க. ஊர்வலம் ஒன்றிலும் இதேபோலப் பிரசாரம் நடத்த முயன்றபோது கருணா ஆதரவாளர்களுக்கும், ம.தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. மாவீரர் நாளில் புலிப் போராளிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் உரையைப்போலவே, கருணாவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் போன்ற ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது.

'தமிழகத்தில் 150 வீடியோ கேசட்டுகள் தயாரிக்கப்பட்டு, 30 ஆயிரம் படிகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில் இவற்றை விநியோகிக்கவும் செய்தனர். பிரபாகரனை ஹிட்லராகச் சித்தரித்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அகதி முகாம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன.
கருணா ஆதரவாளர்களின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் கோபமும் ஆவேசமும் அடைந்தனர். கருணா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் ஆபத்து உண்டானது!’ என இலங்கை ஆய்வாளர் ஒருவரே அப்போது எழுதினார்.

கருணா குழுவின் இந்த எதிர்ச் செயல்பாடுகளால் புலிகளின் தலைமை கடும் கோபமடைந்தது. 'எதிரி’களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.

இதற்கிடையில், தமிழகத்தில் சேர்ந்து இயங்கிய கருணா, பரந்தன் ராஜன் குழுவினர் இங்கு இருந்தபடியே இலங்கையிலும் நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள். இதற்காக, தமிழகத்தில் 18 ஆண்டுகள் தங்கி இருந்த பரந்தன் ராஜன் குழுவின் முக்கிய ஆளான ரங்கப்பா என்பவர் இலங்கைக்குச் சென்றார். அங்கு போய் சிறிது காலத்திலேயே கொழும்பு புறநகர்ப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார்.

ராஜன் குழுவின் முக்கிய மூளையாக செயல்பட்ட மனோ மாஸ்டர் என்பவரும் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். திடீரென அவரும் கடத்தப்பட்டார். கருணாதான் அவரைக் கடத்தியதாக மனோவின் தாயார் யாழ்ப்பாணம் மனித உரிமை கவுன்சிலில் முறையிட்டார். அவர் விஷயத்தில் இன்று வரை சரியான தகவலே இல்லை.

இலங்கையில் இப்படி கருணா ஆதரவாளர்களுக்கு எதிரான 'நடவடிக்கைகள்’ தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் 2004 டிசம்பர் 5-ம் தேதி பரந்தன் ராஜன் உள்பட அவரது குழுவினர் ஒன்பது பேர் திடீரெனக் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். 'அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன.

குடும்பத்தினருடன் பல மணி நேரம் உரையாட அனுமதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டனர். டெல்லி தரப்பில் இருந்து அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பதிலுக்கு அவர்கள், 'விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராட 3,500 போராளிகள் தயார், என ஆதரவு கேட்டனர் என்று இலங்கை பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதினார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மீண்டும் இந்தியாவுக்குள் வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போன மச்சான் திரும்பிவந்த கதையாக, சில மாதங்களில் கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேபோனது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க முடியாமல் கருணா ஆதரவாளர்கள் தவித்தனர். அந்த நேரத்தில், பரந்தன் ராஜன் பெங்களூருவில் 'இந்திரா சர்வதேச அகடமி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்துக்கு, டெல்லியில் இருந்து ஆசியும், ஆதரவும், உதவிகளும் பெருமளவில் வழங்கப்பட்டன என்பதை அந்தக் குழுவினரே பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு, '2006 ஜூலைவாக்கில் கருணா மீண்டும் இலங்கைக்குச் சென்றார்’ என்கிறது விக்கிலீக்ஸ் தகவல்.
'
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கு கருணா ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இயங்கினார்கள்’ என்று சொல்லும் இலங்கை ஆய்வாளர் ஒருவர், சமாதான ஒப்பந்தத்தை புலிகள் மீறியதாக நோர்வே அமைதிக் குழுவுக்கு கோடம்பாக்கம் முகவரியில் இருந்து மனோ மாஸ்டர் புகார் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார்.

சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம்பாக்கம் பகுதிகளிலும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதரவாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் 90 கோடி மதிப்புள்ள ஒரு எஸ்டேட் இருக்கிறது.
தேடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி எஸ்டேட்தான் அவர்களின் முக்கிய மறைவிடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், 'எதிரி’களின் கண்ணிலும் படாமல் அந்த எஸ்டேட்டில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான 'ஏற்பாடுகள்’ பலமாக வழங்கப்பட்டு இருந்தன. இதில்தான் கருணா தங்கி இருந்திருக்க வேண்டும்' என்கிறார்கள் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா?’ என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ விக்கிலீக்ஸ்!

Tuesday, December 21, 2010

கனடா வந்த பெண்ணிடம் புலிகளின் கழுத்துப் பட்டி!

கனடாவுக்கு எம்.வி. சன் சீ கப்பல் மூலம் சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என கனேடிய அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் செயற்பட்டவர் என்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கே உரித்தான கழுத்துப் பட்டி ஒன்றை வைத்திருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் இந்தப் பெண்ணின் விபரங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இவர் மீதான விசாரணைகள நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றன.

தற்போது இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பெண்களைக் கொன்று நர மாமிசம் உண்ட பிரித்தானியருக்கு ஆயுள் தண்டனை

குற்றவியல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதாகும் ஸ்டீபன் க்ரிப்பித்ஸ் 3 பெண்களை கொலை செய்ததாக சில தினங்களுக்கு முன் போலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லீட்ஸ் கிரௌன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.


பிராட்போர்ட், மேற்கு யோர்க்ஷிர் பகுதியில் வசித்து வரும் இவர் வீட்டிற்கு அருகில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியில் உள்ள விபச்சார பெண்கள் மூவரை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை உண்டதாக கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார்.

Monday, December 20, 2010

எண்ணி ரெண்டே வருஷத்தில்.. படுபயங்கர சூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்

உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012 ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும் பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம்.
கி.மு. 3113 ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர்.
 


Sunday, December 19, 2010

குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் - அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி : அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting