ஸ்வீடனில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பிற்கான அனைத்து திட்டங்களும் பிரிட்டனில் இருந்தே தீட்டப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஈராக்கில் பிறந்த தைமௌர் அப்துல்வாஹாப் அல்-அப்தாலி என்பவர் சுவீடன் தலைநகரில் காரில் வெடிகுண்டை வைத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தினார். படித்த காலம் முதற்கொண்டு பல வருடங்களாக அவர் லூட்டன் நகரிலேயே இருந்து வந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது
இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லூட்டன் நகரில் வசித்து வந்தது உறுதியாகியுள்ளதால் ஸ்வீடனில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பிற்கான அனைத்து சதித் திட்டங்களும் பிரிட்டனிலிருந்தே தீட்டப்படிருக்க வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் இவருடன் தொடர்புடைய தீவிரவாதிகள் யார் என்பது உள்ளிட்ட பல விடயங்களையும் போலீசார் தற்போது தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பல பிரிட்டனில் இயங்கி வருவது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ஸ்வீடன் கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதல் சதித்திட்டம் பிரிட்டனிலிருந்தே தீட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்து வருவதால் மிகுந்த பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment