. பிரித்தானிய காவல்துறையினரிடம் சரணடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகரான ஜூலியன் அசான்ச் அவர்களுக்கு லண்டன் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக ஜூலியன் அசான்ச் மீது தோண்டியெடுக்கப்பட்ட சுவீடன் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
இது தொடர்பில் விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், ஜூலியன் அசான்ச் பிரித்தானிய பொலிஸாரிடம் சரணடைந்தார்.பிரித்தானிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஜூலியன் அசான்ச் அவர்களின் வழக்கு இன்று 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட ஜூலியன் அசான்ச் மீது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment