Monday, May 2, 2011

ஒசாமா பின்லேடன் (Osama bin Laden) கொலை !படம்-வீடியோ இணைப்பு

அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின் லேடனின் சடலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. எனினும் இவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒசாமா சுட்டுக்கொல்லப்பட முன் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம் என இப்புகைப்படத்தை வெளியிட்ட கருத்து
தளங்களில் (Forums) பலர் கருத்துப்பதிவு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒசாமாவின் உடலம் ஆப்கானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து உறுதிப்படுத்தும் எனவும் அமெரிக்க தகவல்கள் கூறியிருந்தன.
இது தொடர்பில் News X செய்தி சேவை தெரிவிக்கையில்
உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக அமெரிக்காவால் வர்ணிக்கப்படும், அல் கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை நேற்று (ஞாயிற்றுகிழமை) நள்ளிரவு, அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்த்தான் தலைநகர் இஸ்லாமாபத்திலிருந்து வடக்கே 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் மாளிகையில் தனது குடும்பத்தினருடன் அவர் தங்கியிருந்த போதே, அமெரிக்க இராணுவத்தினரின் ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இத்தாக்குதலில் பாகிஸ்த்தானின் உளவாளிகளும் பங்கெடுத்ததாக பாகிஸ்த்தான் புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.
ஒசாமாவின் தலையில் சூடு
நேற்று நள்ளிரவு, அங்கு தான் ஒசாமா இருப்பதாக தகவல் உறுதிப்பட கிடைத்ததும், சட்டென அங்கு விரைந்த அமெரிக்க புலனாய்வு படையினர், ஒசாமா தங்கியிருந்த பகுதியை துல்லியமாக கணித்து துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். ஒசாமா தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் .
எனினும் அமெரிக்க படையினரின் இடைவிடாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில், ஒசாமா பின்லாடனின் தலையில் குண்டுபாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார்.  அவருடன் மேலும் மூன்று ஆண்களும், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்மணியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
40 நிமிடங்கள் வரை மாத்திரமே இந்த மிஷன் நடந்தேறியது. அமெரிக்க தரப்பில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. எனினும் அங்கு ரேய்டு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறினால் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ஹெலிகாப்டர் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கே இந்த மிஷன் பற்றி தெரியாது?
ஒசாமா மீது தாக்குதல் நடத்த போவதை, பாகிஸ்த்தான் உட்பட்ட எந்த நாட்டுக்கும் அமெரிக்கா அறிவித்திருக்கவில்லை என்பதும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஒரு சிறிய குழுவினருக்கு மாத்திரமே, சம்பவ நேரம் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒசாமா தரப்பினருக்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினர் வரை உளவாளிகள் இருப்பதால், எந்த நேரத்திலும் அவர்கள் விழிப்படைந்து விட கூடும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமாக இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒசாமா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒமா விடுத்த அறிக்கை
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்,
‘இன்றிரவு, என்னால் அமெரிக்கர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அறிவித்தலை கூறமுடியும். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை காவுகொண்ட தீவிரவாத குழு தலைவர் ஒசாமா பின்லாடன், அமெரிக்க படைகள் முன்னெடுத்த ஓர் தாக்குதல் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய உடலமும் தற்போது சிறைகாப்புக்கு (Custody) கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒசாமா பின்லாடனின் இறப்பானது எமது குறிப்பிடத்தக்க ஓர் வெற்றியாகும். நாங்கள் மீண்டும் கூறுகிறோம். இது இஸ்லாம் மதத்திற்கு எதிரான போரல்ல. பின்லாடன் இஸ்லாமியர்களின் மத தலைவரும் அல்ல. அவர் இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்’.
என அவர் தெரிவித்தார். இவ் அறிவித்தலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் மாளிகை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள், ஒசாமாவின் படுகொலைக்கு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
புஷ்ஷின் சபதம் நிறைவேறியது
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷும், இத்தாக்குதலை பெரும் சிறப்பு வாய்ந்த தாக்குதலாக வர்ணித்துள்ளார். எவ்வளவு காலம் எடுத்தது என்பது முக்கியமல்ல. நீதி தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே இதில் குறிப்பிடவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
2001 இல் அமெரிக்க செப்டெம்பர் 11 தாக்குதலின் போது, அதிபராக இருந்த புஷ், மிக உணர்ச்சிவசப்பட்டவராக ஒசாமா பின்லாடன் உயிரோடோ, பிணமாகவே எமக்கு வேண்டும் என சபதமெடுத்திருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
கொல்லப்பட்டது ஒசாமாவா?
கொல்லப்பட்டது ஒசாமா தான் என அல் கைதா தரப்பினரால் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்லேடனின் உடல் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் உடலை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
பாகிஸ்த்தான் சாயம் வெளுத்தது!?
இதேவேளை இவ்வளவு நாளும் ஒசாமாவை பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தது பாகிஸ்த்தானே என்பது இஸ்லாமாபாத்தில் வைத்து ஒசாமா கொல்லப்பட்டதற்கு இது நல்ல சான்று எனவும், இதன் மூலம் பாகிஸ்த்தானின் சாயம் வெளுத்துவிட்டதாகவும், இந்திய தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
1997ம் ஆண்டு அமெரிக்க ஒசாமா பின் லேடனை சி.என்.என் தொலைக்காட்சி செவ்வி கண்ட போது

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Cheap Web Hosting