இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடுக்கி மாவட்ட காட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம்களை அமைப்பதற்கு முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கேரள விமான நிலையத்தைப் பயன்படுத்தக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி காட்டுப் பகுதி தமிழக மாநிலத்தின் எல்லைப் பகுதியை அண்டி அமைந்துள்ளதாகவும் பெரியார் அணையையும் குறித்த காட்டுப் பகுதியையும் புலிகள் பயன்படுத்தக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் தொடர்பில் வெளியான செய்திகளை இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் முற்று முழுதாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment