நேற்று பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து அவர் தலையில் சுடப்பட்டு இறந்தது போன்ற ஓர் புகைப்படம் உலகையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.பின் லேடன் இறந்த புகைப்படத்தை,அமெரிக்கா அதிகார பூர்வமாக இன்னும் வெளியிடாத நிலையில், ஏனைய இணையதளங்களும்,இணைய செய்திகளும், தொலைக்காட்சி,செய்தித்துறை ஊடகங்களும் இணையத்தில் வெளியான ஓர் புகைப்படத்தை வெளியிட்டன.அதனைத் தொடர்ந்து இணையங்களிலும்,சமூக வலைப்பின்னல்களிலும் பரபரப்பு விவாதங்கள் பற்றிக்கொண்டன.நெற்றியில் சுட்டிருக்கிறார்கள் போலும்.?இல்லை கண்பகுதியில்?என்பது போன்று.மறுபுறம் இது உண்மையான புகைப்படமா?போலியா என்று ?
பல மணி நேர ஆராய்ச்சிக்குப் பின்னும்,சில இணைய தளங்கள் அந்த புகைப்படம் போலி என உறுதி செய்யப் பட்ட பின்னுமே ஒருவாறு முடிவுக்கு மக்களால் வர இயன்றது.கடைசியாக பார்த்தால் அது இரண்டு வருடங்களுக்கு முன்பே இணையங்களில் உலவிய புகைப்படமாம்.
இப்படி மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்புவதற்கான காரணம் பொறுப்பற்ற தொலைக்காட்சி ஊடகங்களும்,செய்த்தித்தாள் நிறுவனங்களுமே.உண்மையா என உறுதி செய்யாத ஓர் புகைப்படத்தை எடுத்து அதை மக்கள் மத்தியில் பரப்பி,பரபரப்பை ஏற்ப்படுத்தி வியாபாரம் செய்வது.ஒரு நிகழ்வு நடக்கும் போது ஓர் சாதாரண மனிதன் கூட அது உண்மைதானா?அதற்கு ஆதாரம் இருக்கிறதா என அறிய முயற்சிப்பான்.ஆனால் பொறுப்புள்ள ஊடகங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றன பாருங்கள்!
0 கருத்துரைகள்:
Post a Comment