அ.தி.மு.க. கூட்டம் திருச்சி ஜங்சன் பகுதி கழக அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆழ்வார்தோப்பில் நடந்தது. பகுதி செயலாளர் நாகநாதர்பாண்டி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, வட்ட செயலாளர் காதர்முகமது வரவேற்றனர். மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், பரஞ்சோதி எம்.எல்.ஏ., பேசினர். கூட்டத்தில் நடிகர் ஆனந்தராஜ், சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ் நாட்டில் அ.தி.மு.க. எழுச்சி பெற்று வருகிறது. அ.தி.மு.க.வினர் நடத்தும் கூட்டமே மாநாடுபோல இருக்கிறது. இதைக்கண்டு தி.மு.க. பயப்படுகிறது. கோவை அ.தி.மு.க. கூட்டத்தை பார்த்த தி.மு.க. வாரம் 5 இலவச முட்டை என அறிவித்தது. இதனால் முட்டை விலை உயர்ந்து இப்போது ரூ.4 ஆக உயர்ந்துவிட்டது. திருச்சி கூட்டத்தை பார்த்து பயந்த தி.மு.க. இலவச கான்கிரீட் வீடு என அறிவித்தது. இதனால் ரூ.140-க்கு விற்ற சிமெண்டு மூட்டை இப்போது விலை ரூ.300 ஆகிவிட்டது. அ.தி.மு.க. கூட்டத்துக்கே மாநாடு போல திரளும் கூட்டத்தை பார்த்து தி.மு.க. பயந்து உள்ளது. மேலும் நடிகர்கள் இப்போது திரையுலகம் ஆதரவும் பெருகி வருகிறது. நடிகர்கள் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள், அஜித், விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வருகிறார்கள். பா.ம.க. வர உள்ளது. மேலும் நடிகர்கள் வருவார்கள். எம்.ஜி.ஆர். புத்திசாலி. ஒருமுறை மதுரையில் இரவு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காரில் சென்னைக்கு திரும்பினார். டிரைவருக்கு அருகில் இருந்த அவரது உதவியாளர் தூங்கி, தூங்கி டிரைவர் மேலே விழுந்து கொண்டே இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். உதவியாளர் கையில் வேர்க்கடலையை கொடுத்து கேட்கும்போது தரவேண்டும் என கூறிவிட்டார். விழுப்புரம் வந்தபோது உதவியாளர் கடலை தரவா என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார். மீண்டும் திண்டிவனம் வந்தபோது உதவியாளர் கடலை வேண்டுமா, என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார். இறுதியில் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபோதும் உதவியாளர் கேட்டபோது எம்.ஜி.ஆர். வேண்டாம் என கூறிவிட்டார். உடனே உதவியாளர் பிறகு ஏன் இரவில் கடலையை வாங்கி என்னிடம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். நீ...தூங்கி... தூங்கி டிரைவர் மேலே விழுந்ததால் டிரைவரால் ஓட்ட முடியவில்லை. கடலையை வாங்கி நான் உன்னிடம் கொடுத்ததால் நான் திடீர் என கேட்பேன் என்பதால் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பாய் என்பதால் கடலை பொட்டலத்தை உன்னிடத்தில் கொடுத்து வைத்தேன் என்றார். அதனால்தான்... அவருக்கு அ.தி.மு.க.வில் பலர் இருந்தும் புத்திசாலியான ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க.வை ஒப்படைத்தார். இன்னும் 3 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் தமிழகத்தில் மீண்டும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார் |
0 கருத்துரைகள்:
Post a Comment