Sunday, January 16, 2011

பொதுகழிவறைகள்போல் கிருமி பரப்பும் ATM மெசின்கள். லண்டன் ஆய்வு

அடுத்த முறை ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது கிளவுஸ் அணிந்து கொள்ளுங்க அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கை கழுவுங்க என்கிறது இங்கிலாந்து ஆய்வு முடிவு. ஆம். பொது கழிப்பறை மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ஏடிஎம்களில் இருந்தும் கிருமி தொற்ற வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.

லண்டனை சேர்ந்த ஆன்ட்டி&பாக்டீரியா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் கிருமி தொற்றும் வழிகளுக்கான டாப் 5 இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களின் தொடுதிரை, கீ போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக் கழிப்பறை சீட்களில் இருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது.
வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் ஒரே அளவு இருந்தது அதில் தெரிய வந்தது.

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் கழிப்பறையில் தொற்றக் கூடிய பாக்டீரியாக்கள், ஏடிஎம் இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிப்பறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.
இந்த பட்டியலில் 2வது இடத்தை பொதுத் தொலைபேசி பிடித்தது. போனில் இருந்து கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறினர்.

இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீபேடையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்று பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. பட்டியலில் பஸ் நிறுத்தங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரிய வந்தது.







logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting