கனடாவை நோக்கி இன்னும் இரண்டு கப்பல்களில் மிக விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைப் புலனாய்வுத் துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. |
இறுதிக்கட்ட போரின் போது பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் சென்றிருந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஆகியோர் குறித்த கப்பல்களில் தப்பிச் செல்லவுள்ளதாக கனடா மற்றும் இலங்கைப் புலனாய்வுத்துறையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் கப்பல் பயணத்துக்கான ஆட்கள் திரட்டப்பட்டு வருவதுடன், அவர்கள் சிங்கப்பூரை அண்டிய தென்கிழக்காசிய நாடொன்றின் பிரதேசமொன்றில் ஒன்று சோ்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைவதே அவர்களது இலக்கு என்று அறியப்படுகின்றது. ஆயினும் அவர்களை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமான கப்பல்கள் இதுவரை ஏற்பாட்டாளர்களுக்குக் கிட்டாத நிலையில் அவர்கள், தற்போது அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது. ஆயினும் குறித்த பயணம் தொடர்பான விபரங்கள் புலனாய்வுத்துறை வசம் கிட்டியிருந்தாலும், பயணிகளின் உயிர் ஆபத்து கருதி கப்பல்களின் பயணங்கள் பெரும்பாலும் தடுக்கப்படப் போவதில்லை என்றும் உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. அவ்வாறான நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் கப்பல்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. |
0 கருத்துரைகள்:
Post a Comment