Thursday, January 13, 2011

லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் கட்டுநாயக்கவில் கடத்தல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று முன்னதினம் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுள் இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கும் போது, அவர் கடத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த பொலிஸில் முறையிடவும் கடத்தப்பட்ட மாணவரின் பெற்றோர் பீதியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்த போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலாவது ஆர்ப்பாட்டம் லண்டன் விமான நிலையத்தில் சில மாணவர்களால் நடத்தப்பட்டது. 

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் புகைப்படங்களையும், விபரங்களையும் விரைவில் தமக்கு வழங்குமாறு இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரசன்ன சில்வாவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். 

அதன் பின்னர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பின்னர் தெரியப்படுத்துவதாகவும், ஜனாதிபதி அங்கு பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. 

தற்போது குறித்த மாணவர் கடத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக லங்கா நியூஸ் வெப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள




logo design

1 கருத்துரைகள்:

Thirumalai Kandasami said...

londalayum itha thane,,

http://enathupayanangal.blogspot.com

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting