Wednesday, January 12, 2011

வைகோ(வால்) சாணி தமிழனா ?

தமிழ் இனத் துரோகி வைகோவை அடையாளம் காண்க…!!!
 
 நேற்றைய தினம் (11-01-2011) வைகோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் ஈழ மக்களின் துயரமும், தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கை வன்னியன்களும், கருணாக்களும் தொடர்ந்தும் துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும்,
சோனியா பணமும் கொடுத்து மூன்று தளபதிகளையும் அனுப்பினார் என்றும்,
லண்டன் சேனல் 4ஐ பார்த்து நெஞ்சில் நெருப்பு விழுந்து வெடித்ததாகவும்,
இவற்றையெல்லாம் மூடி மறைக்க இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் திட்டம் வகுத்துள்ளது என்றும்,
விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்த ஈ.என்.டி.எல்.எப். தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு, சிறிபெரும்புதூரிலிருந்து டெல்லிக்கு நடைபயணம் போவதாகவும் பொய்களை பரப்புரை செய்யவும்,
ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரை கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் இந்தத் துரோகிகளைக் கண்டு விழிப்புணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று வைகோ தனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அறிக்கை விட்டுள்ளார்.
வாய்வெடி வைகோவுக்கு ஈ.என்.டி.எல்.எப். சார்பாகப் பதில் கூற எங்களைத் தூண்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் எண்ணற்ற துரோகங்களைச் செய்ததாக கூறியுள்ளீர்கள், ஒரு துரோகத்தை என்றாலும் சொல்லியிருந்தால் நாங்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்க முடியும். வாயில் வருவதை எல்லாம் சவாலாக விட்டு எங்கள் ஈழத் தமிழ் இனத்தை நீங்கள் அழிவுக்கு தள்ளிச் சென்றீர்களா இல்லையா?
எங்களைத் துரோகிகள் என்று கூறுகிறீர்கள், நீங்கள் உங்கள் இனத்துக்கே துரோகம் செய்கிறீர்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும், நீங்கள் தெலுங்கு பேசும் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர், வீட்டுக்குள் தெலுங்கில்தான் பேசுகிறீர்கள், வெளியில் மேடைகளில் உங்களை மதுரைத் தமிழன் என்று பொய் சொல்கிறீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று ஈழத் தமிழர்களிடம் அடுக்கு மொழியில் பேசி பணம் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள், அவர்களும் உங்களைத் தமிழன் என்று எண்ணி விருந்து கொடுத்து வாழ்த்தி அனுப்புகின்றனர். நீங்கள் அவர்களிடத்து உங்களது தாய்மொழி தெலுங்கு என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?

ஆந்திராவில் வாழும் தெலுங்கு மக்கள் மிகவும் பண்புள்ளவர்கள், தெய்வபக்தி மிக்கவர்கள். கிருஸ்ணதேவராயர் காலத்தில் மதுரையைப் பிடித்த தெலுங்கு மகனாகிய நீங்கள் உங்கள் தாய் மொழியை மறைத்துப் பணமும், புகழும் சேர்க்க முற்பட்டு உங்கள் தாயை இழிவு படுத்துகிறீர்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?

சோனியா படையை அனுப்பினார், படைக்கலம் கொடுத்தார் என்று கூறிய வைக்கோல் இப்போது பணம் கொடுத்தார், தளபதிகளை அனுப்பினார் என்று பிதற்றுகிறீர்கள்! மறந்து போய்விட்டது முன்பு பேசியவற்றை?
சேனல் 4ஐ பார்த்து நெஞ்சு வெடித்தது உமக்கு! எங்கள் இனத்தைப் பலி கொடுத்து தேர்தலில் ஜெயிக்க முயற்சித்ததை மறந்து சேனல் பார்த்து நெஞ்சு வெடிக்கும் கதையை மீண்டும் ஆரம்பித்து விட்டீர்கள். எந்த இடத்திலிருந்து மறுபடி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவிப்பிலிருந்த உணர்வாளர்களுக்கு துரோகக்கூட்டம் கிடைத்துவிட்டது என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
நீங்கள் ஓர் இந்திய எதிர்ப்பாளராகி இருபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. புலிகளையும் இந்திய எதிர்ப்பாளராக்கி, வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களையும் இந்திய எதிர்ப்பாளர்களாக்கிவிட்டீர்கள்.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டது. அந்த வேளை இந்தியாவைத் துண்டாட பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தன.
இந்தியா இரண்டாவது தடவையாக அருகிலிருக்கும் நாட்டுக்குப் படை அனுப்புவதை அமெரிக்கா விரும்பவில்லை.
இராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்திய  ஒப்பந்தம் வெற்றிபெறுவதை அன்றைய ஏகாதிபத்தியம் விரும்பவில்லை. புலிகள் இயக்கத்தை இந்தியாவுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் திருப்பிவிட நீங்கள் உங்களது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்குக்கூட தெரியாமல் கள்ளத் தோணியில் வன்னிக்குச் சென்றது தமிழகத்து மக்களுக்கு வேண்டுமென்றால் வீரச்செயலாக இருக்கலாம். நீங்கள் அன்று ஏகாதிபத்தியத்தின் தூதுவராகச் சென்ற விடயம் யாருக்கும் தெரியாது என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தி.மு.க. வுடன் சுமூக உறவை ஏற்படுத்தி புலிகளை வழிக்குக் கொண்டு வந்து தனிநாடொன்றை உருவாக்க ராஜீவ்காந்தி அவர்கள் மேற்கொண்ட முயற்சியை அறிந்துதான் ஏகாதிபத்தியம் உம்மை தி.மு.க. வுக்குத் தெரியாமல் வன்னிக்கு அனுப்பி அந்தத் திட்டத்தை முறியடித்த விடயம் அன்றே தெரியும்.
பிரேமதாசாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற புலிகளுக்குப் பாதை வகுத்தது நீங்கள்தான். பிரேமதாசாவை புலிகளுக்கு ஆயுதம் வழங்க உத்தரவு போட்டது சி.ஐ.ஏ. நீங்கள் அந்தக் காலங்களில் எத்தனை தடவைகள் அமெரிக்காவுக்குச் சென்றுவந்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
உங்களது சந்திப்பிற்குப் பிறகு விடுதலைப்புலிகள் அன்று பயன்படுத்திய ஆயுதங்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆயுதங்கள்தான். அதாவது எம்-16 ரக துப்பாக்கிகள் உள்பட அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் பிரேமதாசாவால் கொடுக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள்தான்.
இதற்கெல்லாம் முகவராக செயல்பட்டது நீங்கள்தான் என்று தமிழக மக்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். எங்களுக்குத் தெரியும். இன்று அமெரிக்கா மாறியிருக்கலாம், இன்றும் நீங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிதான்.
நீங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டுதான் கட்சியைப் பிரித்தீர்கள், பின்னர் எத்தனை தடைவ கட்சிகள் மாறினீர்கள்? எங்களைப் பார்த்து ஈழத் தமிழர் என்ற போர்வையில் செல்கின்றனர் என்று ஈழத் தமிழ் மக்களையே ஏமாற்றும் ஓர் பொய்யைச் சொல்லியுள்ளீர்கள், நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு கட்சி மாறியதை மறந்து போர்வைக் கதை விட்டுள்ளீர்கள்.
நீங்கள் தெலுங்கு நாயுடு! தமிழன் என்ற போர்வை போர்த்தது போன்று எங்களைச் சொல்கிறீhகள். நாங்கள் ஈழத் தமிழர்கள்தான், இந்தியத் தமிழர்கள் அல்ல! போர்வை போர்க்க வேண்டிய தேவை எமக்கில்லை.
துரோகிகள் என்று வேறு பட்டம் சூட்டியுள்ளீர்கள். நாங்கள் காக்கை வன்னிய இனம் இல்லை. ஆனால் நீங்கள் எட்டப்ப நாயக்கர் இனம் என்பது ஈழத் தமிழருக்குத் தெரியாது. நீங்கள் புலிகளிடமும், ஏகாதிபத்தியத்திடமும் பணம் பெற்றுக் கொண்டு பணியாற்றிய வரலாறு மக்களுக்குத் தெரியாது. மேடைகளில் அழுது வடிந்து தமிழ் இன உணர்வாளராகக் காண்பித்தே 20 ஆண்டுகளை ஓட்டியுள்ளீர்கள். ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகிய காலம் தொட்டு நீங்கள் ஈ.என்.டி.எல்.எப். க்கு எதிராக பல தீயச் செயல்களைச் செய்துள்ளீர்கள்.
எங்கள் இனத்தின் மீது பயணம் செய்து அவர்களைக் கொலைக் களத்துக்கு அனுப்பி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து அதிலும் தோல்வி கண்டது போதும். ஈழத் தமிழரது பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கேரளாவுக்கு முட்டை, காய்கறி போவதைத் தடுத்து தமிழ்நாட்டுக்கு உணர்வைக் காண்பித்து தமிழனாக முயற்சி செய்யவும்.
நீங்கள் செய்துவிட்ட இந்தியத் துரோகமும், ஈழத் துரோகமும் பற்றி விலாவாரியாக ஆதாரங்களுடன் வெளியிடுகிறோம் விரைவில் கண்டுகொள்ளவும்.
நன்றி!
இவ்வண்ணம்,
அரசியல்பிரிவு,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
12-01-2011

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting