Saturday, March 1, 2008

கொழும்பில் தற்கொலைப் படை தாக்குதல்-






கொழும்பு மோதரா பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கொழும்பு மோதரா பகுதியில் உள்ள ஒரு 3 மாடி லாட்ஜில் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து இன்று காலை 6.05 மணியளவில் போலீஸார் அங்கு விரைந்தனர். குறிப்பிட்ட அறையில் புகுந்து சோதனை போட போலீஸார் முயன்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். சம்பவத்தில் அவர் உடல் சிதறி பலியானார். தாக்குதலில் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸாரும், 2 பெண்கள் உள்பட நான்கு தமிழர்களும் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து 9எம்எம் துப்பாக்கியும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர். கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு வீட்டில் தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தெரிய வந்துள்ளதால் நகரில் பரபரப்பு அதிகரித்துள்ளது. நகர் முழுவதும் உஷார்நிலையில் பாதுகாப்புப் படையினர் வைக்கப்பட்டுள்ளனர்

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

 
Cheap Web Hosting