Sunday, January 23, 2011

வேற்றுக் கிரகவாசிகள் விரைவில் பூமிக்கு வருவார்கள்: அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது" என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 
பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும் தெரிவித்தனர்.
இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.
ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.



logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting