நிஜத்தில் போரிட்ட பிரபாகரன் அவர்களினால் ஈழ விடுதலையினை வென்றெடுக்க முடியாது போன காரணத்தினாலோ என்னவோ, தமிழ் ஈழ விடுதலை புலிகளின் புதிய தலைவராக சினிமாவில் இருந்து ஒருவரை புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தேர்தெடுத்துள்ளார்கள்.
ஈழத் தமிழர்களின் சார்பாக ராகுல் காந்திக்கு பதில் வழங்கும் அதிகாரத்தினை சீமானுக்கு யார் கொடுத்தது என்ற தலைப்பில் நெருப்பில் வந்த கட்டுரைக்கு பதில் வழங்கியுள்ள புலிகள் சார்பு இணையதளம் ஒன்று, தமது புதிய தலைவன் சீமான் குறித்து பேசுவதற்கு அர்சுணனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டுள்ளது.
இது குறித்து நாம் புலிகளின் ஆதரவு மட்டத்தில் பேசிய பொழுது, ஆம் சீமான் அவர்களையே தமது புதிய தலைவராக நியமித்து உள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை என்றும் கூறினார்கள். இந்த தகவல் ஆனது உண்மையாக இருப்பின், இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்.
ஏனெனில் சீமான் 30 நாட்களில் தமிழ் ஈழத்தினை தயாரித்து கொடுத்துவிடுவார். இதனை இரண்டரை மணித்தியாலத்தில் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் பார்த்துவிட்டு பரவசம் அடைவார்கள்.
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் புதிய தலைவர் சினிமா இயக்குனர் சீமானா? என்ன கொடுமை சார்? அப்படியாயின் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் உருத்திகுமார் யார்? உருத்திரகுமாரை துரோகியென்று கூறிவரும் நெடியவன் குழுவினர் யார்?
0 கருத்துரைகள்:
Post a Comment