Tuesday, February 15, 2011

மவுசை தொடாமல் உங்கள் முக அசைவினால் வெப் கமெரா மூலம் உங்கள் கண்ணனியை இயக்க மென்பொருள் .

Camera Mouse (download) is a free program that enables you to control the mouse pointer on your computer screen just by moving your head. Camera Mouse works as a mouse replacement system for Windows computers so it should work with just about any application program.
Camera Mouse : Move Mouse Cursor in Windows Using Face, Head Movements
The main audience for this program is people who do not have reliable control of a hand but who can move their head. A Windows 7, Vista, or XP computer system and a standard USB webcam (or a webcam built into the computer or monitor). This program is available for free download.
You just have to set CameraMouse’s benchmark, either the forehead, an eyebrow or nose. Stand still, CameraMouse will click for you. The app. might look complex but its easy one you get the hand of it.
The video above shows the working for the Camera Mouse software and how you can control mouse with head facial movements.

HeadMouse2 (download) allows mouse operation only through the movements of the head that detects a webcam. This was a project to facilitate interaction with physical disabilities with computers.
In principle, the system works with any web camera. The program requires a few settings to detect the head movements and then recognize facial gestures to click: close your eyes, open mouth, raised eyebrows , etc.
HeadMouse 2 : Control Mouse with Eyes, Face Actions
Once you start moving the mouse simply with head gestures, the setup process will have been worthwhile, especially for those with physical difficulty managing input devices.
The video above shows the working for the Camera Mouse software and how you can control mouse with head facial movements.

logo design

Saturday, February 12, 2011

டுவிட்டரை வாங்கப்போவது யார்?


சமூக வலைப்பின்னல் தளமான டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நிறுவங்களின் அதிகாரிகளின் இடையே கீழ்மட்ட அளவில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய டுவிட்டரின் பெறுமதி 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் கடந்த வருட வருவாய் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

டுவிட்டருக்கு உலகம் பூராகவும் 190 மில்லியன் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் தினசரி 65 மில்லியன் டுவிட்டர்கள் பரிமாறப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

logo design

Thursday, February 10, 2011

19 பெண்களை திருமணம் செய்த ரோமியோவை தேடி பொலிஸ் வலைவீச்சு!


பெண்களை திருமணம் செய்த 33 வயது வாலிபன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வாலிபனின் பெயர் சரத் குமார. குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


இவரிர் 19 ஆவது மனைவியின் உடலை சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பி ஒன்றால் எரித்து இருக்கின்றார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 27.

கணவன் கேட்டு இருந்த பணத்தை இவர் கொடுக்கவே இல்லை. இதனால்தான் எரிக்கப்பட்டார். கணவன் கொடுத்த அடியில் இவரின் கை ஒன்று முறிந்து விட்டது.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

கணவன் முன்னர் 18 பெண்களை திருமணம் செய்து இருந்தார் என்று பொலிஸாருக்குத் தெரிவித்து இருக்கின்றார்.




logo design

Wednesday, February 9, 2011

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மரணதண்டனை வழங்கும் அபாயம்


"விக்கிலீக்ஸ்' ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ்சே சுவீடனுக்கு அனுப்பப்பட்டால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளுக்காக சுவீடனுக்கு ஜூலியன் அஸேஞ்சை அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே அவரது சட்டத்தரணிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜூலியன் அஸேஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அந்நாட்டு இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது சட்டத்தரணியான ஜியோப்ரி ரொபேர்ட்ஸன் கூறினார்.

மேலும் சுவீடனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஸேஞ்சே (39 வயது) மறுப்பு தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள பெல்மார்ஷ் நீதவான் நீதிமன்றில் ஜூலியன் அஸேஞ்சே தொடர்பான இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜூலியன் அஸேஞ்சே சுவீடனிலிருந்து நாடு கடத்தப்படமாட்டார் என்பதை சுவீடன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டுமேன அஸேஞ்சேவின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்



logo design

Tuesday, February 8, 2011

சிறையில் ஒரு சிங்கம் (வீடியோ இணைப்பு)



முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டு எதிர்வரும் 08 ஆம் திகதியுடன் ஒரு வருடம் ஆகின்றது.

கடந்த 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் கைதிகள் 1500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொன்சேகா சிறையில் என்ன மன நிலையில் இருக்கின்றார்? என்பதை அறிகின்றமையில் ஊடகவியலாளர்கள் தனி ஆர்வம் காட்டினர்.

சில ஊடகவியலாளர்கள் இப்பகீரத முயற்சியில் வெற்றி கண்டனர்.



logo design

தொடர் செக்ஸ்(SEX) தாக்குதல் நடத்தும் மர்ம நபர் ஒரு தமிழரா? (வீடியோ இணைப்பு)


லண்டன் ரூட்டிங் பகுதியில் வீதியில் செல்லும் பல பெண்கள் மேல் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல பாலியல் தாக்குதலுக்கு ஒரு நபரே பொறுப்பு என்றும், அது நடைபெறுகின்ற விதம், மற்றும் இடம் என்பனவற்றை ஆராய்ந்த பொலிசார் தொடர் பாலியல் குற்றங்கள் புரிபவரை வீதியோர வீடியோக் கமராவில் பதிவுசெய்துள்ளனர். அவர் நடமாட்டத்தையும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் அவர் ஒரு தமிழர் என்று இனம் காணப்பட்டுள்ளார். லண்டன் டூடிங் மற்றும் மிச்சம் பகுதிகளில் இந்த மர்மத் தமிழரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


வீதியில் செல்லும் பெண்ணை ஏதாவது ஒரு விதத்தில் கதையக் கொடுத்து, பின்னர் அவரை மறைவான இடத்துக்கு இவர் இழுத்துச் செல்வதாகவும் பின்னர் அவர்கள் மேல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பதாகவும் இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சுமார் 5 பெண்கள் மேல் இவர் பாலியல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் இத் தாக்குதலை நடத்தும் தமிழரின் மரபணுக்களை(DNA) பொலிசார் தற்போது எடுத்துள்ளனர். இருப்பினும் குற்றவாழியை கண்டறிய முடியவில்லை.

இதனால் அவர்கள் தமிழ் சமூகத்தினரின் உதவியையும் நாடியுள்ளதோடும், அவரைக் கண்டுபிடித்து தந்தால் 10,000 பவுண்டுகளைச் சன்மானமாக வழங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். மிகவும் ஆபத்தான இவரை எவராவது இனம் கண்டால் உடனடியாக கிரைம் ஸ்டாப்பேஸ் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. இருப்பினும் பொலிசார் தற்போது மீண்டும் மக்களின் உதவியை நாடியுள்ளனர்




logo design

Friday, February 4, 2011

எதிர்ப்புகள் பற்றி கவலை இல்லை: அரசியலில் குதிக்க அஸ்திவாரம் போடுகிறேன்; நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி


நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகின்றது. ரசிகர் மன்ற மாநாட்டை விரைவில் கூட்டி புது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று செய்தி பரவியுள்ளது. இது பற்றி விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நான் நினைத்ததை விட மிகப்பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்கார வைத்துள்ளனர். இது போல் இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமர வைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. மற்றவர்கள் பேச்சை கேட்டு நான் செயல்படுவது இல்லை. அரசியலில் இறங்குவதற்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டுக் கொண்டு வருகிறேன்.

வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர் கடவுள். சாதாரண மனிதர்களால் அதை தடுக்க முடியாது. நான் இது போன்று பேசுவதால் என் வீட்டில் கல் எறியப்படலாம். என்னை வழி மறித்து தாக்கவும் செய்யலாம். எந்த ஆபத்து வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்.

காவலன் படத்துக்கு பல தடைகள் வந்தன. அதையெல்லாம் மீறி படம் வந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்தார்கள் படம் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு விஜய் கூறினார்.




logo design

Sunday, January 23, 2011

சதாம்உசேன் எழுதிய கதை சினிமா படமாகிறது


ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சர்வாதி காரியான இவர் 24 வருடங் களாக ஈராக்கில் ஆட்சி நடத்தினார். அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்இவர் அதிபராக இருந்த போது கடந்த 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெரு மளவில் விற்று சாதனை படைத்தன. 

இந்த நிலையில் அவர் எழுதிய “ஷபீபா அண்டு தி கிங்” “புரூனோ” என்ற கதைகள் சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதை பேரமவுண்ட் ஆங்கில பட நிறுவனம் இவற்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது. 

இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென் டைரக்டு செய்கிறார். நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது


logo design

வேற்றுக் கிரகவாசிகள் விரைவில் பூமிக்கு வருவார்கள்: அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது" என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 
பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும் தெரிவித்தனர்.
இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.
ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.



logo design

Saturday, January 22, 2011

சீறுவாரா சீமான்?மகிந்தவின் வாரிசு நாமலுக்குப் பொன்னாடை போர்த்திய ரவிசங்கர் குருஜி: சிறந்த சேவைகள் செய்கின்றாராம்


இலங்கை வந்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே ரவிசங்கர் குருஜி அவருக்குப் பொன்னாடை போர்த்தியுள்ளார்.

2600 வது வருட புத்த ஜயந்தியை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாளை அமைப்பும், வாழும் கலை அமைப்பும் இணைந்து அறநெறி நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்துள்ளன. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
அதன் போது பெங்களூரிலிருந்து வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜியும் வருகை தந்திருந்தார். விழா மேடையில் வைத்தே அவர் நாமலின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.


logo design

Friday, January 21, 2011

இது எனக்கு சரியான நேரம் அல்ல :விஜய்


இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது.
அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார்.அப்போது கூறியதாவது:

காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார். 

logo design

சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!


நயன்தாரா பற்றிய ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.
'வல்லவன்' படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சினை உருவானது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்திற்குத் தெரியவர பெரும் பிரச்சினை வெடித்தது. இப்போதுதான் அந்தப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரம்லத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையைக் கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது.

விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சினை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு தமக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களைத் தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகிப் போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயைத் திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.



logo design

Thursday, January 20, 2011

யமுனைக் கரையில் அம்மணக் கூத்து! இன்னொரு சாமியார் வீடியோ!


அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நித்தியானந்தாவின் வீடியோ சர்ச்சை சற்று தணிந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சாமியாரின் வீடியோ பரபரப்பை கிளிப்பியுள்ளது.
மதுராவில் வசித்து வந்த ராஜேந்திரா என்பவர் புராணக் கதை சொற்பொழிவாளர். அவரது பக்த கோடிகளால் பகவத் ஆச்சார்யா என்று அழைக்கப்பட்டவர். ஒரு மடமும் நடத்தி வந்திருக்கின்றார்.


அங்கு வரும் தனது வெளிநாட்டு பக்தர்கள் மூலம் ஒரு புது தொழில் தொடங்கியுள்ளார். அது தான் பிட்டுப் படங்களில் அர்த்தமுள்ள இந்துமதம்! பிட்டுப்படங்களுக்கு டைரக்டர் கம் ஹீரோவான நமது சாமியார் காட்சிகளை உண்ர்ந்து நடிக்க வெளியாட்கள் ஒத்து(!) வராது என்று நினைத்தார் போலும்; தன் மனைவியிடமே கால்ஷீட் வாங்கி விட்டார். சர்ரியலிஸத்துக்காக அதில் சில குழந்தைகளையும் பங்கு பெறச் செய்திருக்கிறாராம்! பின் நவீனத்துவத்தை எதற்கு பிசினாரித் தனமாக விட்டு வைக்க வேண்டும் என்று அவரது மடத்தையும் பின்புலமாக சித்தரித்து புதுமையை புகுத்திவிட்டார்.


இப்படியான விசயம் எடுக்கும் போது ஒரு தெய்வீக எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பின்னணியில் அவரது கடவுள்களின் புகைப்படங்களையும் வைத்துள்ளார். மடத்துக்குள்ளே எடுத்தால் Indoor Film என்றும் கம்மி பட்ஜெட் என்றும் விநியோகஸ்தர்கள் கூறிவிடுவார்கள் என்பதால் யமுனை நதிக்கரையில் சில காட்சிகளையும் எடுத்துள்ளார்.


இந்த ஜிலுக்கு ஜிப்பான் வீடியோக்கள் எல்லாம் ஏற்கனவே பல வெப்சைட்கள் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் பிட்டுப் படங்களால் நிரம்பி பால்வினை வைரஸ் வந்ததோ என்னவோ அவரது லேப்டாப்புக்கு இடுப்பு சுளுக்கி விட்டதாம்! அதனை ஒரு இடத்திற்கு சர்வீசுக்கு செல்ல அங்கிருந்த கரசேவகர்கள் சிலரால் பொது மக்களும் பயன்பெறும் நோக்கில் உள்ளூர் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.


எப்போதும் போல் லேட்டாக விழித்துக் கொண்ட போலீஸ் அவரைத் தேடி செல்ல அவரோ போலிசிடமிருந்து தப்பிக்கும் புனிதப் பயணத்தை மேற்கொண்டார். 15 நாட்கள் கடும் தேடலுக்குப் பிறகு அவரது வீட்டில் வைத்து போலீஸ் செக்ஸ் சாமியாரை கைது செய்துள்ளனர்.


கைது செய்தபோது ஷூடிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட கேமெரா, பல CD கள் கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் குழைந்தைகள், மனைவி மற்றும் வெளி நாட்டினரோடு 'இருக்கும்' பல மணி நேரம் ஓடக் கூடிய விடியோக்கள் உள்ளனவாம்.


logo design

Wednesday, January 19, 2011

நடிகர்கள் விஜய், அஜீத் அ.தி.மு.க.வில் இணைவார்கள்: திருச்சியில் ஆனந்தராஜ் பேச்சு



அ.தி.மு.க. கூட்டம் திருச்சி ஜங்சன் பகுதி கழக அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆழ்வார்தோப்பில் நடந்தது. பகுதி செயலாளர் நாகநாதர்பாண்டி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, வட்ட செயலாளர் காதர்முகமது வரவேற்றனர். மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், பரஞ்சோதி எம்.எல்.ஏ., பேசினர்.

கூட்டத்தில் நடிகர் ஆனந்தராஜ், சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. எழுச்சி பெற்று வருகிறது. அ.தி.மு.க.வினர் நடத்தும் கூட்டமே மாநாடுபோல இருக்கிறது. இதைக்கண்டு தி.மு.க. பயப்படுகிறது. கோவை அ.தி.மு.க. கூட்டத்தை பார்த்த தி.மு.க. வாரம் 5 இலவச முட்டை என அறிவித்தது.

இதனால் முட்டை விலை உயர்ந்து இப்போது ரூ.4 ஆக உயர்ந்துவிட்டது. திருச்சி கூட்டத்தை பார்த்து பயந்த தி.மு.க. இலவச கான்கிரீட் வீடு என அறிவித்தது. இதனால் ரூ.140-க்கு விற்ற சிமெண்டு மூட்டை இப்போது விலை ரூ.300 ஆகிவிட்டது.

அ.தி.மு.க. கூட்டத்துக்கே மாநாடு போல திரளும் கூட்டத்தை பார்த்து தி.மு.க. பயந்து உள்ளது. மேலும் நடிகர்கள் இப்போது திரையுலகம் ஆதரவும் பெருகி வருகிறது. நடிகர்கள் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள், அஜித், விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வருகிறார்கள். பா.ம.க. வர உள்ளது. மேலும் நடிகர்கள் வருவார்கள். எம்.ஜி.ஆர். புத்திசாலி. ஒருமுறை மதுரையில் இரவு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காரில் சென்னைக்கு திரும்பினார்.

டிரைவருக்கு அருகில் இருந்த அவரது உதவியாளர் தூங்கி, தூங்கி டிரைவர் மேலே விழுந்து கொண்டே இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். உதவியாளர் கையில் வேர்க்கடலையை கொடுத்து கேட்கும்போது தரவேண்டும் என கூறிவிட்டார்.

விழுப்புரம் வந்தபோது உதவியாளர் கடலை தரவா என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார். மீண்டும் திண்டிவனம் வந்தபோது உதவியாளர் கடலை வேண்டுமா, என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார்.

இறுதியில் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபோதும் உதவியாளர் கேட்டபோது எம்.ஜி.ஆர். வேண்டாம் என கூறிவிட்டார்.

உடனே உதவியாளர் பிறகு ஏன் இரவில் கடலையை வாங்கி என்னிடம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். நீ...தூங்கி... தூங்கி டிரைவர் மேலே விழுந்ததால் டிரைவரால் ஓட்ட முடியவில்லை. கடலையை வாங்கி நான் உன்னிடம் கொடுத்ததால் நான் திடீர் என கேட்பேன் என்பதால் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பாய் என்பதால் கடலை பொட்டலத்தை உன்னிடத்தில் கொடுத்து வைத்தேன் என்றார்.

அதனால்தான்... அவருக்கு அ.தி.மு.க.வில் பலர் இருந்தும் புத்திசாலியான ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க.வை ஒப்படைத்தார். இன்னும் 3 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் தமிழகத்தில் மீண்டும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்




logo design

Tuesday, January 18, 2011

விலைமாதருடன் பிரதமருக்கு தொடர்பா ? புதிய சர்ச்சை

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி விலை மாதரை தங்க வைப்பதற்காக பல வீடுகளை மிலான் நகரில் வைத்துள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.அவரது வைபவங்களில் துகிலுரி நடனமாடும் பெண்கள் தங்கவே இவற்றை அவர் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அவர் 17 வயதான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த கரீமா என்ற பெண்ணுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலிய நாட்டு சட்டதிட்டங்களின் பிரகாரம் 18 வயதிற்கு குறைவான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.கரீமா மஹ்ரோப் எனப்படும் நடன மாது கடந்த வருடம் மே மாதம் திருட்டுக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டபோது அவரை சில்வியோ பெர்லுஸ்கொனி தலையிட்டு விடுதலை செய்ய முயற்சி செய்தார் எனவும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும் இப்பாலியல் குற்றச்சாட்டுக்களை இருவரும் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது




logo design

சுவிஸ் வங்கி கணக்குகள்: விரைவில் அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்

லண்டன், ஜன.17- சுவிஸ் வங்கியில் ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்களை விரைவில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவுள்ளது. 
ஜூலியஸ் பேயர் என்னும் பிரபலமான சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை (சி.டி.) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியுள்ளார். 
லண்டனில் உள்ள “ஃபிரன்ட்லைன் கிளப்”பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுலியன் அசான்ஜேயிடம் சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் அந்த குறுந்தகட்டை ஒப்படைத்தார். 
இதையடுத்து, ருடால்ஃப் எல்மருக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜே தனது பாராட்டை தெரிவித்தார். “இதன் மூலம் நிதி உலகின் நிழல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட முடியும்” என்று அசான்ஜே குறிப்பிட்டார். 
சி.டி.,யில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். 
அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை வெளியிட்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


logo design

Monday, January 17, 2011

கனடாவை நோக்கி இன்னும் இரண்டு கப்பல்கள்: விடுதலைப் புலி உறுப்பினர்களும் தப்பிச் செல்லவுள்ளதாக தகவல்!

கனடாவை நோக்கி இன்னும் இரண்டு கப்பல்களில் மிக விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைப் புலனாய்வுத் துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இறுதிக்கட்ட போரின் போது பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் சென்றிருந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஆகியோர் குறித்த கப்பல்களில் தப்பிச் செல்லவுள்ளதாக கனடா மற்றும் இலங்கைப் புலனாய்வுத்துறையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் கப்பல் பயணத்துக்கான ஆட்கள் திரட்டப்பட்டு வருவதுடன், அவர்கள் சிங்கப்பூரை அண்டிய தென்கிழக்காசிய நாடொன்றின் பிரதேசமொன்றில் ஒன்று சோ்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைவதே அவர்களது இலக்கு என்று அறியப்படுகின்றது.
ஆயினும் அவர்களை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமான கப்பல்கள் இதுவரை ஏற்பாட்டாளர்களுக்குக் கிட்டாத நிலையில் அவர்கள், தற்போது அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

ஆயினும் குறித்த பயணம் தொடர்பான விபரங்கள் புலனாய்வுத்துறை வசம் கிட்டியிருந்தாலும், பயணிகளின் உயிர் ஆபத்து கருதி கப்பல்களின் பயணங்கள் பெரும்பாலும் தடுக்கப்படப் போவதில்லை என்றும் உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

அவ்வாறான நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் கப்பல்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




logo design

Sunday, January 16, 2011

கொழும்பு பாதுகாப்பு கமேராவில் பதிவான விபத்துக்கள் வீடியோ--Colombo CCTV in action

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாயவின் முயற்சியால் நவீனத்துவத்தை நோக்கி நகரும் இலங்கை (வீடியோ இணைப்பு)


logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting