Showing posts with label Assange Julian Wikileak. Show all posts
Showing posts with label Assange Julian Wikileak. Show all posts

Wednesday, February 9, 2011

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மரணதண்டனை வழங்கும் அபாயம்


"விக்கிலீக்ஸ்' ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ்சே சுவீடனுக்கு அனுப்பப்பட்டால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளுக்காக சுவீடனுக்கு ஜூலியன் அஸேஞ்சை அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே அவரது சட்டத்தரணிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜூலியன் அஸேஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அந்நாட்டு இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது சட்டத்தரணியான ஜியோப்ரி ரொபேர்ட்ஸன் கூறினார்.

மேலும் சுவீடனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஸேஞ்சே (39 வயது) மறுப்பு தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள பெல்மார்ஷ் நீதவான் நீதிமன்றில் ஜூலியன் அஸேஞ்சே தொடர்பான இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜூலியன் அஸேஞ்சே சுவீடனிலிருந்து நாடு கடத்தப்படமாட்டார் என்பதை சுவீடன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டுமேன அஸேஞ்சேவின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்



logo design

Tuesday, January 18, 2011

சுவிஸ் வங்கி கணக்குகள்: விரைவில் அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்

லண்டன், ஜன.17- சுவிஸ் வங்கியில் ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்களை விரைவில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவுள்ளது. 
ஜூலியஸ் பேயர் என்னும் பிரபலமான சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை (சி.டி.) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியுள்ளார். 
லண்டனில் உள்ள “ஃபிரன்ட்லைன் கிளப்”பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுலியன் அசான்ஜேயிடம் சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் அந்த குறுந்தகட்டை ஒப்படைத்தார். 
இதையடுத்து, ருடால்ஃப் எல்மருக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜே தனது பாராட்டை தெரிவித்தார். “இதன் மூலம் நிதி உலகின் நிழல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட முடியும்” என்று அசான்ஜே குறிப்பிட்டார். 
சி.டி.,யில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். 
அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை வெளியிட்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


logo design

Monday, December 27, 2010

வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச்(Assange Julian) ஒப்பந்தம்

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (29). அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ரகசியங்களை வெளியிட்டதால் இவர் தலைமறைவானார். இங்கிலாந்தில் பதுங்கியிருந்த இவர் மீது 2வீடன் பெண்கள் பாலியல் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் லண்டனில் உள்ள தனது நண்பரின் பங்களாவில் தங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளார். இதற்காக அவர் புத்தக நிறுவனங்களிடம் ரூ.7 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தகவலை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுவீடனை சேர்ந்த 2 பெண்கள் என் மீது “செக்ஸ்” புகார் கூறியுள்ளனர். அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.14 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். இந்த வழக்கை நடத்த இன்னும் அதிக அளவு பணம் தேவைப்படுகிறது.

அதற்கான பணம் சேர்க்கதான் நான் எனது சுயசரிதையை எழுத இருக்கிறேன். அமெரிக்காவை சேர்ந்த புத்தக பதிப்பாளர் ஆல்பிரிட் ஏ. நாப் என்பவரிடம் ரூ.4 கோடியும், இங்கிலாந்தை சேர்ந்த பதிப்பாளரிடம் ரூ.3 கோடியும் பெற்றுள்ளேன் என்று கூறினார்.

எனது சுயசரிதை புத்தகத்தில் சுவீடன் பெண்கள் என் மீது கூறியுள்ள “செக்ஸ்” புகார் பற்றி எழுத மாட்டேன். மற்றபடி என் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை எழுதுவேன் என்றார். இதன் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




logo design

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting