Wednesday, January 9, 2008

கருணா அம்மான் கலக்குவாரா?

குடிவரவு விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) , தனக்கெதிராக மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் எவையும் கொண்டுவரப்படுமிடத்து அவற்றைச் சந்திக்க விரும்புவதாக தெரிய வருகிறது. தன்னைச் சந்தித்த லண்டன் தமிழ் ஊடகவியலாளர் ; ஒருவரிடம் இதனைத் தெரிவித்த கருணா அம்மான் , சர்வதேச மன்னிப்புச் சபை அல்லது மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் எவற்றையும் தனக்கெதிராக கொண்டுவருவதை தான் விரும்புவதாகவும் , கிழக்கு மாகாணத்தில் , தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெறிப்படுத்தலில் அவர்களின் புலனாய்வுப் பொறுப்பாளர் ச.பொட்டுவின் திட்டத்தின்படியே சகல மனித உரிமை மீறல் சம்பவங்களும் நடைபெற்றிருந்ததை தன்னால் நிரூபிக்க முடியுமெனவும் கூறியுள்ளார். அத்துடன் சமாதான காலத்தில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து செல்ல நேரிட்ட காரணங்களிலொன்றாக, தனக்குத் தெரியாமல் வன்னித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றிருந்ததை தான் பகிரங்கமாக சுட்டிக் காட்டியதாகவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கெதிராக பகிரங்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமிடத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகமோசமான மனித உரிமை மீறல்களில் நேரடியாகப் பங்கெடுத்த பலர் தற்போது அகதி அந்தஸ்து பெற்று பிரித்தானியா உட்பட பல ஜரோப்பிய நாடுகளில் வசித்துவருவதால் இவர்களையும் சாட்சியாக அழைக்குமாறு தான் கோரவுள்ளதாகவும் , அப்போது கிழக்குமாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்த முஸ்லீம் , சிங்கள மக்கள் மீதான படுகொலை முயற்சிகள் அனைத்தும் தலைவருடையதும் அவரது புலனாய்வுப் பொறுப்பாளரதும் நேரடி நெறிப்படுத்தலிலேயே நடைபெற்றிருந்ததை தன்னால் நிரூபிக்கமுடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக யூன் 1990ல் 600 க்கும் அதிகமான முஸ்லீம் சிங்கள பொலிசார் நிராயுதபாணிகளாக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் , ஓகஸ்ட் 1990ல் காத்தான்குடி பள்ளிவாசலில் 25 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லீம் பொது மக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் , ஒக்டோபர் 1992ல் பொலனறுவையில் 172 சிங்களப் பொது மக்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவமும் , டிசம்பர் 1999ல் அம்பாறையில் பெண்கள் குழந்தைகள் உட்பட 96 அப்பாவிச் சிங்களப் பொது மக்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவமும் , தேசிய தலைவரின் நேரடி உத்தரவுப்படி புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானினால் வன்னியிலிருந்து அனுப்பப்பட்ட புலனாய்வுத் துறையைச் சேர்ந்த புலி உறுப்பினர்களாலேயே நடாத்தப்பட்டதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கமுடியுமென கருணா அம்மான் நம்பிக்கை தெரிவித்ததாக தெரியவருகிறது.

மேலும் ; மறைந்த மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியார் அடேல் பாலசிங்கம் அவர்கள் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்த காரணத்தால் தனக்கு எதிரான விசாரணைகளின் போது அவரையும் விசாரணைக்குள்ளாக்குமாறு கருணா அம்மான் கோரவுள்ளதாக அறியப்படுகிறது. கருணா அம்மானின் மனைவி தற்போது லண்டனில் தங்கியிருப்பதாலும் , அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு முக்கிய பதவியினை முன்னர் வகித்திருந்த காரணத்தாலும் , அடேல் பாலசிங்கத்தின் 'பங்களிப்பு ' பற்றிய பல தகவல்களை அவர் விசாரணைகளின்போது பகிரங்கப்படுத்துவார் என தெரியவருகிறது.

மனித உரிமை மீறல்கள் குற்றங்களுக்காக கருணா அம்மானை 'கழுவில் ஏற்ற' புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் பலர் ஆரம்பத்தில் அந்தரித்தபோதும் , வன்னியிலுள்ள புலித் தலைமையின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அதனைக் கை விட்டிருந்தனர். ஆனால் கருணா அம்மானுக்கெதிராக குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதன் மூலம் அகில உலகிலும் ஆகக் கூடிய மனித உரிமை மீறல்களைப் புரிந்த பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்த முடியும் என சர்வதேச சமூகம் கருதியதால் கருணா அம்மானுக்கு எதிரான 'போர்க் குற்றங்கள் ' பற்றிய விசாரணைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இது பிரித்தானியாவிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களை பெரும் பிரச்சினையில் சிக்க விட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் அறிவுறுத்தலைமீறி 'அணுவும் அசையாது ' என்பது அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில் கருணா அம்மானுக்கு எதிரான விசாரணைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியில் மேலும் பலவீனப்படுத்துமெனவே பரவலாக நம்பப் படுகிறது.

Saturday, January 5, 2008

Friday, November 2, 2007

பெருங் காவு.......



இன்று(02/11/2007) காலை கிளிநொச்சியில் இன்று காலை 6 மணியளவில் விமானப்படையின் இரு போர் விமானங்கள் இரணைமடு துறுவையாறு பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீதும், இரணைமடு வடகிழக்கிலுள்ள கரும்புலிகளின் தளமொன்றின் மீதும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன . இவ் விமான தாக்குதலின் போது விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் உட்பட 6 முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

Thursday, November 1, 2007

இதயத்தில் சுடரேறறுவோம்.........

ஈழப்போரில் இதுவரைகாலமும் எம்மககளின் சுதந்திரத்துக்காக இன்னுயிர் ஈர்த்த எத்தனையோ ஆத்மாக்களின் தியாகம் அவர்கள் புதைந்த குழியுனுள்
அவர்களோடு புதைக்கப்பட்டு துரோகிகள் என்ற கொடியும் நடப்பட்டுள்ளது।

இது ஒரு வரலாற்றுக் குற்றம் என்பதோடு இத்தியாகிகள் சார்ந்த அமைப்புகளின் இயலாமையுமாகும் இதனை மாற்ற வேண்டும் இவர்களின்
இழப்புகள் சொல்லும் சரித்திரம், சகோதர வெறியாட்டம் ,வெளிக்கொனரப்பட்டு
எமது போராட்ட வரலாற்றின் உன்மை வடிவதை உறுதிப்படுத்துவதோடு
இந்த உத்தமர்களின் தியாகங்களும் கெளரவப்படுதப்பட வேண்டும்।

இதற்கான பல முயற்சிகளும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக நடைபெற்ற போதிலும் அவை இன்னும் முழுமை அடையவில்லையென்றே கூற வேண்டும்
ஆதலால் ஆற்றல்மிக்க ஆர்வம்மிக்க அனைத்து மாற்றுக்கருத்துக்கொண்ட போராளிகளும் கலந்துரையாடி கருத்தொருமித்து களமிறங்க வேண்டும்
இதை நாம் இன்றே தொடங்க வேண்டும்


இதற்கான் பங்களிப்பை இதய சுத்தியோடு வழங்க சந்தி முந்தி நிற்க முயற்சி செய்யும்

இதற்கான முதபடியக உங்களுக்கு தெரிந்த அறிந்த பரிட்ச்சயமான தியாகிகளைப்பற்றிய முளுவதுமான விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்।

இது சந்தி ப்போம்

Sunday, October 28, 2007

யாரு பெற்ற பிள்ளைகள் ???????









Monday, October 22, 2007

நன்றி....

நடு நிலையான நல்ல விடயங்களை நாளும் தரும் தரமான தமிழ் தளம்
ஈரஅனலுக்கு இனிய நன்றிகள்
சந்தி

Sunday, October 21, 2007

நம்மநிலைமையும் இப்படிதான்......

சர்தார்ஜி கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன் நிற்கிறார். மனைவி : என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?சர்தார் : நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் மூஞ்சி எப்படி இருக்கும்னு பார்க்கிறேன்.
***
சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.
***
சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர்.ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.
***
பாண்டாசிங் : நான் லீவுக்கு ஊருக்குப் போறேன். நல்ல க்ரைம் நாவல் இருந்தாக் கொடுங்க, படிக்கிறதுக்கு..சாண்டாசிங் : இந்த நாவல் படிங்க.. நிறைய கொலைகள் நடக்கும். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.பாண்டாசிங் : அப்படியா!சாண்டாசிங் : ஆமா... கடைசிப்பக்கம் படிக்கும்போதுதான் தெரியும், தோட்டக்காரன் தான் கொலைகாரன்னு.
***
சர்தார் : சார்..நான் ஒரு புக் போனவாரம் எடுத்துட்டுப் போனேன். ஆனால் என்னால அது என்ன கதைன்னு புரிஞ்சிக்கவே முடியல.. ஒரே நம்பரா இருக்கு. நூலகர் : அடப்பாவி..அது டெலிபோன் டைரக்டரி சார். அதத்தான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன்.
***
நண்பருக்கு போன் செய்தார் சாண்டாசிங்.சாண்டாசிங் : இது 044-9234656 தானா?எதிர்முனை : இல்லை. இது 044-9234657(சில வினாடிகள் யோசித்த பின்) சாண்டாசிங் : அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..பக்கத்து ரூம்ல இருக்கற என் நண்பரைக் கூப்பிடுங்க.

Tuesday, October 16, 2007

சந்தியில்..........

இது புதிய சந்தி இதில் சந்திபோம் சிந்திப்போம் செயற்படுவோம்..........
உங்க்ளின் ஆக்கமும் ஊக்கமும் புதிதோர் உலக்ம் படைக்க உறுதி எடுப்போம்........

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting